சனி, 17 ஏப்ரல், 2010

குக்கும்பர் தால்(Cucumber )

தேவையான பொருட்கள்


•வெள்ளிரிக்காய் – 1

•துவரம் பருப்பு – 1/2 கப்

•வெங்காயம் – 1

•தக்காளி – 1

•பச்சை மிளகாய் – 2

•கருவேப்பில்லை – 4 இலை

•மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி

•கொத்தமல்லி – கடைசியில் தூவ

•எண்ணெய் – 1 தே.கரண்டி

•கடுகு – தாளிக்க



செய்முறை

•முதலில் துவரம் பருப்பினை பிரஸ்ர் குக்கரில் போட்டு வேகவைத்து கொள்ளவும்.

•வெள்ளிரிக்காயினை தோல் நீக்கி பொடிதாக வெட்டி கொள்ளவும். (விதைகள் இருந்தால் நீக்கிவிடவும்).

•வெங்காயம் , தக்காளி மற்றும் கொத்தமல்லியை வெட்டி வைக்கவும்.பச்சை மிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும்.

•ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பின் வெங்காயம், கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.

•அதன் பின் தக்காளி, பச்சை மிளகாயினை போட்டு 3 நிமிடம் வதக்கி வெள்ளிரிக்காயினை போட்டு நன்றாக வதக்கவும்.

•மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேகவிடவும்.

•பிறகு வேகவைத்துள்ள துவரம் பருப்பினை சேர்த்து மேலும் 5 நிமிடம் வேகவிட்டு கடைசியில் கொத்தமல்லி தூவவும்.

•இப்பொழுது சுவையான வெள்ளிரிக்காய் தால் ரெடி.

•இதனை சாதம், சாப்பத்தியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

•குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது இத்துடன் சிறிது நெய் சேர்த்து பிசைந்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல