சனி, 17 ஏப்ரல், 2010

கேரளத்து மீன் குழம்பு.

தேவையான பொருட்கள்

•மத்தி மீன்(சிறிய சாளை) - அரை கிலோ

•எண்ணை - 2 டேபிள் ஸ்பூன்

•கடுகு,உ.பருப்பு - அரை ஸ்பூன்

•வெந்தயம் - கால் ஸ்பூன்

•சீரகம் - கால் ஸ்பூன்

•சின்ன வெங்காயம் - 100 கிராம்

•மிளகாய் -2

•பூண்டு - 4 பல்.

•இஞ்சி - சிறிய துண்டு

•தக்காளி - 1

•கொடம் புளி- ஒரு சிரிய துண்டு

•மீன் மசாலா ( ஈஸ்டன்)- 3 டீஸ்பூன்

•தேங்காய்ப்பால் - 1 கப்

•அரிசி மாவு - 1 டீஸ்பூன்

•உப்பு - தேவைக்கு

•கருவேப்பிலை,கொத்தமல்லி இலை - கொஞ்சம்.


செய்முறை

•முதலில்
மீனைச்சுத்தம் செய்து ( சிறிய மீனாக இருக்கும் ,அதனை வாலில் இருந்து தலைநோக்கி செதிலை சுறண்டி எடுத்தால் வந்து விடும்,தலையையும் வயிற்றோடு சேர்த்து அரிந்து கழித்து போட்டு விடவும்)உப்பு மஞ்சள் போட்டு
கழுவிக்கொள்ளவும்.

•புளிக்கரைக்க வேண்டாம் ,அப்படியே துண்டாக போடலாம்.

•வெங்காயம்
,தக்காளி கட் பண்ணிக்கொள்ளவும்.மிளகாய் கீறிக்கொள்ளவும்,பூண்டை
தட்டிக்கொள்ளவும். இஞ்சி பொடியாக கட் பண்ணவும்.தேங்காய்ப்பாலுடன்
அரிசிமாவை கலந்து வைக்கவும்.

•கடாயில் எண்ணை
விட்டு,கடுகு,உ.பருப்பு,வெந்தயம்,சீரகம்,இஞ்சி,பூண்டு,வெங்காயம்,
கருவேப்பிலை தாளிக்கவும்,வதங்கியவுடன்,தககாளி,உப்பு போட்டு
மூடவும்.தக்காளி மசிந்தவுடன் மீன்மசாலா பொடியை போட்டு தண்ணிர் சேர்த்து
கொடம் புளியை போடவும்.

•மசாலா வாடை ,புளி வாடை அடங்கியவுடன் ,மீனை
போட்டு கொதிவந்து அடுப்பைக்குறைத்து விடவும்.5 நிமிடம் கழித்து
தேங்காய்ப்பால் கலவையை விட்டு சிம்மிலேயே 5 நிமிடம் வைத்து அடுப்பை
அணைத்து் விடவும்.விரும்பினால் மல்லி இலை தூவி பறிமாரலாம்.

•கேரளத்து மீன் குழம்பு ரெடி.

குறிப்பு:

தேங்காய் எண்ணை வாசம் பிடிப்பவர்கள் உபயோகிக்கலாம். இது மலயாளி ரெஸ்டாரண்ட் உள்ள குழம்பு போலவே இருக்கும். இந்த மீனை முழுதாக முதல் மறியாதை செவாலியே சிவாஜி ஸ்டைலில் சாப்பிட்டால் மிக நன்றாக இருக்கும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல