சனி, 17 ஏப்ரல், 2010

இஞ்சி துவையல்

ஜீரணத்திற்கு மிகவும் உகந்த எளிமையான பக்க உணவு.

தேவையான பொருட்கள்


•6 " இஞ்சி துண்டு

•உளுத்தம் பருப்பு ஒரு கப் (சிறியது)

•புளி - ஒரு கொட்டை பாக்கு அளவு

•காய்ந்த மிளகாய் 2

•உப்பு தேவையான அளவு

•பெருங்காயம் சிறிதளவு

•எண்ணெய் -வதக்குவதற்கு


செய்முறை


•வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பை லேசாக சிவக்கும் படி வறுக்கவும்.

•பிறகு காய்ந்த மிளகாயையும் பெருங்காயத்தையும் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.

•பிறகு இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக், அதையும் நன்கு வறுத்துக் கொள்ளவும்.

•சூடு ஆறிய பிறகு வறுத்த பொருட்களுடன் உப்பு புளி சேர்த்து மிக்ஸியில் நற நற வென்று

அரைக்கவும்.

குறிப்பு:

இதை சாதத்துடன் பிசைந்து சாப்பிடவோ அல்லது மோர் சாதத்திற்குத் தொட்டுக்
கொள்ளவோ மிகவும் நன்றாக இருக்கும். அதிக காரம் சாப்பிடாதவர்கள் சிறிது
தேங்காயும் வறுத்து சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல