சனி, 17 ஏப்ரல், 2010

வெரி ஈசி திடீர் சாம்பார் சாதம்

சற்று ரிச்சாக வேண்டுமானால் வறுத்த முந்திரியைச் சேர்க்கலாம்.
திடீர் விருந்தினரை சமாளிக்க உதவும்.

இதற்கு அப்பளம், பப்படம், உருளைக்கிழங்கு பொரியல், சிப்ஸ் நல்ல காம்பினேஷன்.


தேவையான பொருட்கள்

•பச்சரிசி - 1 1/2 கப்

•துவரம்பருப்பு - 1/2 கப்

•நறுக்கிய காய்கள் (கேரட், பீன்ஸ், பெங்களூர் கத்தரிக்காய், பரங்கிக்காய்,
பூசணிக்காய், பச்சைப்பட்டாணி, டபுள் பீன்ஸ்) - எல்லாம் சேர்ந்து 2 கப்

•வெங்காயம் - 1

•புளி - எலுமிச்சை அளவு

•சாம்பார் பொடி - 3 டீஸ்பூன்

•நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி

•நெய் - 2 டீஸ்பூன்

•எண்ணெய் - 1 டீஸ்பூன்

•கடுகு - 1/2 டீஸ்பூன்

•பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்

•கறிவேப்பிலை - 1 கொத்து


செய்முறை

•முதலில் குக்கரில் வைக்கும் பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் விட்டு துவரம்பருப்பைப்

போட்டு அடுப்பில் வைக்கவும்.

•காய்களை நறுக்கி, புளி கரைத்து, வெங்காயம் வதக்கி -எல்லாம் ரெடி செய்யும் வரை துவரம்பருப்பு

வெந்து கொண்டிருக்கட்டும்.

•பிறகு அரிசியைக் களைந்து சேர்க்கவும்.

•எண்ணையில்
வதக்கிய வெங்காயம், நறுக்கிய காய்கறித்துண்டுகள், கரைத்த புளி, உப்பு,
சாம்பார் பொடி சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி நெய்யில்
கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.

•பச்சைக் கொத்தமல்லியைத்தூவிக் கிளறி மூடி வைக்கவும்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல