சனி, 17 ஏப்ரல், 2010

கொங்கோவில் பாலியல் வன்முறை ஓர் யுத்த ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது

கொங்கோவில் பாலியல் வன்முறை ஓர் யுத்த ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு கொங்கோ குடியரசுப் பிரதேசத்தில் அதிகளானோர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

ஆயுதம் தாங்கிய குழுக்களினால், கொங்கோ பெண்கள் பாலியல் ரீதியான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த பல ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்று வருவதாகவும், அண்மைக்காலமாக இந்த நிலைமை மோசமடைந்து செல்வதாகவும் குறிப்பிடப்படுகிறது.

கடந்த நான்கு ஆண்டு காலத்தில் 40,000 பாதிக்கப்பட்ட பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

அநேகமான பெண்களை ஆயுதக் குழுக்களைச் சேர்ந்த பலர் ஒரே நேரத்தில் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.

60 வீதமான பெண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களினால் துன்புறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, பிரதேச சிவிலியன்களினால் மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கையும் உயர்வடைந்துள்ளன.

தீவிரவாதிகளும், அரச படையினரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை யுத்த தந்திரோபயமாக பயன்படுத்தி வருவதாக பிரபல தன்னார்வ தெண்டு நிறுவனமான ஒக்ஸ்பாம் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் தென் கியூவ் பிரதேசத்தில் 5000 பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையினர் கடமையில் ஈடுபட ஆரம்பித்த காலத்தின் பின்னர் இந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல