தமிழ் அகதிகளின் புகலிடக் கோரிக்கையை மூன்று மாதங்களுக்கு இடை நிறுத்தி வைப்பது என்ற அவுஸ்திரேலிய தீர்மானத்தை நியாயப்படுத்துவதற்காக ஐரோப்பாவில் ஒரு பிரச்சினையை எடுத்துக் காட்டியதுடன் பல நாடுகள் இலங்கை அகதிகளின் புகலிடக் கோரிக்கையை இடை நிறுத்தியுள்ளன என்றும் அந்நாடு தெரிவித்திருந்தது.
எனினும் அந்நாட்டு அமைச்சர்களான வெளிநாட்டமைச்சர் ஸ்டீபன் ஸ்மித், குடிவரவு அமைச்சர் கிறிஸ் இவான் ஆகியோரால் இலங்கை அகதிகளின் புகலிட கோரிக்கையை நிறுத்திய எந்தவொரு நாட்டின் பெயரையும் குறிப்பிட்டு கூற முடியவில்லை.
ஏனைய நாடுகளும் இலங்கை அகதிகளின் புகலிட கோரிக்கையை நிறுத்தியுள்ளன என்று அமைச்சர் ஸ்மித் அலுவலகம் நேற்று முன்தினம் இரவு தெரிவித்த போதிலும் அத்தகைய ஒரு நாட்டையேனும் அதனால் பெயர் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை என்று டென்மார்க் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை அகதிகளின் புகலிட கோரிக்கைகளை நிறுத்தியது அவுஸ்திரேலியா மட்டுமல்ல என்று அந்நாட்டு வெளிநாட்டமைச்சரும் குடிவரவு அமைச்சரும் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்த பின்னர் டென்மார்க்கும் புகலிட கோரிக்கைகளை நிறுத்தி விட்டதாக வெளியான அறிக்கைகள் குறித்து டென்மார்க் விசாரணை செய்து வருகிறது. இலங்கை அகதிகளின் புகலிடக் கோரிக்கையை டென்மார்க் தற்போது ஏற்றுக் கொள்வதில்லை என்று ஃபெயார் ஃபக்ஸ் பத்திரிகை செய்தி வெளி யிட்டிருந்தது.
அவுஸ்திரேலிய அமைச்சர் ஸ்மித் அலுவலகம் நேற்று முன்தினமிரவு வெளியிட்ட அறிக்கையில், டென்மார்க் அகதிகள் மேன்றையீட்டு சபை கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 6 இலங்கை தமிழ் அகதிகளின் புகலிட கோக்கை தொடர்பான மேன் முறையீட்டை இடை நிறுத்தியது என்றும் பின்னர் ஜூன் மாதத்தில் இலங்கை அகதிகளின் சகல மேன் முறையீடுகளையும் நிறுத்தி வைத்தது என்றும் தெவிக்கப்பட்டிருந்தது.
மேற்படி இரண்டு இடை நிறுத்தல்களினதும் அடிப்படையும் நோக்கம் ஒரே தன்மையானவை அதாவது மாறும் நாடுகள் தொடர்பாக கவனம் செலுத்துவதற்காகவே இடை நிறுத்தல் தீர்மானம் எடுக்கப்பட்டது என்றும் அந்த அறிக்கையில் தெவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மேற்படி புகலிடக் கோரிக்கை சம்பந்தப்பட்ட குடும்பங்கள் ஒரு அபாயகரமான நிலைமைக்கு திரும்புவதை தடுப்பதற்கா கவே அக்கோரிக்கைகள் இடை நிறுத்தப்பட்டன என்று டென்மார்க் அகதிகள் மேன்றையீட்டு சபை தெரிவித்துள்ளது.
ஆனால் இலங்கை நிலைமை குறித்து ஒரு அறிக்கை கிடைக்கப் பெற்றதும் டென்மார்க் தலைநகர் கொப்பன்ஹேகனில் செயல்படும் மேன்றையீட்டு சபை கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் மேற் கொண்ட இடை நிறுத்தல்களை கைவிட்டு விட்டது.
டென்மார்க் வட்டாரங்கள் நேற்று முன்தினம் வெளியிட்ட தகவலில், அவுஸ்திரேலிய இடை நிறுத்தலின் எதிர்விளைவை அதாவது தமிழ் குடும்பங்கள் திருப்பி அனுப்பப்படுவதை தவிர்ப்பதற்காகவே ஆரம்ப இடை நிறுத்தல் மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக