வெள்ளி, 16 ஏப்ரல், 2010

பாலியல் கேள்வி பதில்கள்

தீராத தலைவலிக்கு மருந்து செக்ஸ்

சிலருக்கு ‘செக்ஸ்’ தலைவலி ஏற்படக்கூடும். பலவிதத் தலைவலிகளில் இதுவும் ஒன்று, ஆனால் தீராத ஒற்றைத் தலைவலி எனப்படும் Migraine தலைவலிக்கு நல்ல மருந்து செக்ஸ்! செக்ஸ் அட்ரினலையும், கார்டினலையும் தூண்டி விடுவதால் மறைந்துவிடுகிறது மைக்ரேன் தலைவலி


உடலுறவு முடிந்ததும் பாத்ரூம் செல்லவில்லை என்றால் இன்ஃபெக்ஷன் ஏற்படுமா?

உடலுறவின்போது வெளியேறும் விந்து சிலமணி நேரம் உடலிலேயே இருப்பதால் எந்த இன்ஃபெக்ஷனும் ஏற்படாது. குழந்தை பெற விரும்பும் பெண்களுக்கு, உறவு முடிந்த்தும் போய் சுத்தம் செய்ய வேண்டாம். முக்கால் மணிநேரமாவது அதே பொசிஷனில் படுத்திருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். இத்தகைய ஆலோசனை பெற்றுக் கொண்டவர்கள், உடலுறவுக்கு முன் சிறுநீர் கழிப்பது நல்லது. இல்லாவிட்டால் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, உறவுகொண்ட பின் இருந்து கொண்டேயிருக்கும். வெகுநேரம் பொறுத்துக் கொண்டிருந்தால் “யூரினரி இன்ஃபெக்ஷன்” ஏற்படலாம்

தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகங்கள் தளருமா?

தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகங்கள் சரிவதில்லை. பாலூட்டும்போது ப்ரா அணியாமல் இருந்திருக்கலாம். சில தாய்மார்கள் வெறும் நைட்டி மட்டும் போட்டு உள்ளே ப்ரா அணியாமல் விடுகின்றனர். இதனால் தான் வெகு விரைவாக மார்பகங்கள் சரிந்து விடுகின்றன. இதற்கு க்ரீம், மாத்திரை, மருந்து எதுவும் பலனளிக்காது. மாறாக அவை சிலருக்கு அலர்ஜி ஏற்படுத்தக்கூடும். பிளாஸ்டிக் சர்ஜரி மட்டுமே நிரந்தரத் தீர்வு. ஆனால் அதற்கு அதிக செலவாகும். தோற்றத்தை சரிப்படுத்த வேண்டுமானால், கம்பிகள் பொருத்தப்பட்ட ப்ரா கிடைக்கிறது. அதை உபயோகிக்கலாம். காம்புகளைச் சுற்றி ஏற்படும் சுருக்கத்திற்கு தோலில் போதுமான எண்ணெய்ப் பசை இல்லாததே காரணம். விக்விட் பாரஃபி எண்ணெய் நல்ல பலனளிக்கும். இதை காலையும் மாலையும் காம்புகளைச் சுற்றித் தடவினால் நாளடைவில் சுருக்கம் மறையும்.

உடலுறுவுக்குப் பின் பெண்கள் சிறுநீர் கழிப்பது கர்ப்பத்தை தடுக்குமா?

இல்லை. இது முற்றிலும் தவறான தகவல். உடலுறவுக்குப் பின் உடனே சிறுநீர் கழித்தாலும், கர்ப்பமடைவதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளன. சிறுநீர்ப்பை வீக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வேண்டுமானால் கொஞ்சம் குறையலாம். முறையான குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் மட்டுமே கர்ப்பத்தைத் தடுக்கும்.

டைட் ஜீன்ஸ் போடுவது கர்ப்பமாவதற்குத் தடையா?

ஆம், இறுக்கமான உள்ளாடைகள் அணிவது, இறுக்கமான ஜீன்ஸ் அணிவது போன்றவற்றால் வியர்வை வெளியேறும் வாய்ப்பு குறைகிறது. அதோடு உறுப்பில் ஏற்படும் தசை இறுக்கத்தாலும் அந்தப் பகுதியில் உண்டாகும் அதிக உஷ்ணத்தாலும் விந்தணுக்கள் உற்பத்தி பாதிக்கிறது. இதனால் கரு உருவாகாமல் போகக்கூடும்.

ஆணுக்கு விரைப்புத்தன்மை குறைவாக இருப்பது கரு உருவாவதை பாதிக்குமா?

தொடர்ச்சியான செக்ஸ் தெரபி மூலம் விரைப்பின்மையை முழுமையாக குணப்படுத்த முடியும். இந்த சிகிச்சையால் ஹார்மோன் குறைபாடு, விந்தணு குறைபாடு போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். தெர்மாமீட்டரில் உடல் வெப்பம் எவ்வளவு என்று கணக்கிட்டு, அது குறிப்பிட்ட அள்வு இருக்கும்போது உடலுறவு கொண்டால் கரு உண்டாகும் என்பது வெறும் வதந்தி. அதனால் டென்ஷன் ஏற்பட்டு வழக்கமான விரைப்புகூட ஏற்படாமல் துவண்டுவிட வாய்ப்புகள் அதிகம். டென்ஷன் இல்லாமல் ஒரு சில நாட்கள் உறவு கொண்டாலே கரு உருவாக வாய்ப்பு உண்டு.


ஆண்கள் உடலுறவுக்கு முன் க்ரீம் தடவிக் கொள்வதால் பெண்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?

விந்து முந்துவது, விறைப்பை நீட்டிப்பது போன்ற காரணங்களுக்காக சில ஆண்கள் க்ரீம் பயன்படுத்துகின்றனர். இதனால் பெண்களுக்கு எந்தப் பாதிப்பும் நேராது. தோல் அலர்ஜி இல்லாதிருந்தால் எந்த பாதிப்பும் நேராது. செக்ஸ் தெரப்பிஸ்டை அணுகினால், நவீன சிகிச்சை முறையில் இதுபோன்ற பலவீனங்களை சரி செய்ய முடியும். தொடர்ந்து உடற்பயற்சி செய்து வருபவர்களுக்கும் க்ரீமோ, மாத்திரைகளோ தேவைப்படாது.


சில சிறுவயது பெண்களுக்கு மார்பகங்களின் வளர்ச்சி மிக அதிகமாக இருப்பது ஏன்?

வயதுக்கு வந்ததும் ஈஸ்டிரோஜன் என்ற ஹார்மோன் அதிக அளவில் சுரப்பதே வயதுக்கு மீறிய மார்பக வளர்ச்சிக்கு காரணமாகும். இரத்தத்தில் ஈஸ்டிரோஜன் அளவைக் கண்டு அதை குறைப்பதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். இது இன்னும் பெரியதாகாமல் தடுக்கிறது. பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளலாம். ஆனால் இதற்கு நாற்பதாயிரம் ரூபாயிலிருந்து ஐம்பதாயிரம் வரை செலவாகும்.


மாதவிலக்கு காலத்திற்கு பின் முட்டை வெளிப்படுகிறது என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

மார்பகங்கள் கனமாக இருக்கும். அடி வயிறு வலிக்கும். லேசான ரத்தக்கசிவு ஏற்படும். உடலின் வெப்ப நிலையை அதிகாலையில் அளக்கும் பரிசோதனையை மேற் கொள்ளும்போது, கருவணு விடுபடும் வாய்ப்பு இருந்தால் வெப்பம் குறைந்து மறுநாளே கூடும்.

இவை போன்ற அறிகுறிகள் இருந்தால் கருவணு விடுபடுகிறது என யூகிக்கலாம். கருப்பை திசு சுரண்டல் பரிசோதனை போன்ற ஆய்வுகள் மூலமும் கண்டறியலாம்.


முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?

மறுபடியும் குழந்தை வேண்டுமானால் கருப்பையின் வடிவம், தன்மை மற்றும் முன்பு செய்த ஆபரேஷனின் விளைவுகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் கருப்பை குழாய்களின் தன்மை மற்றும் நீளத்தையும் கண்டறிய வேண்டும். ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சையினால் அடஹெஷன்ஸ் என்கிற நிலை ஏற்பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு. அதாவது, கர்ப்பப்பை, கருப்பை குழாய், சிறுகுடல், சிறுநீர்ப்பை ஆகியவை ஜவ்வு போன்ற இணைப்புகளால் ஒட்டிக்கொண்டிருக்கலாம். அப்படி இருக்கிறதா என்று முதலில் பார்க்க வேண்டும். இருந்தால், அதற்குத் தகுந்த சிகிச்சைகளை கொடுக்கலாம். இவற்றை கண்டறிய பல முறைகள் உண்டு.

சோனோ சால்பிஞ்கோகிராம் என்கிற ஸ்கேன் முறையில் அறுவை சிகிச்சை இல்லாமல் கருப்பை மற்றும் நாளத்தின் தன்மையைக் கண்டறியலாம் அல்லது லாப்ரோஸ்கோபி என்கிற முறை உதவும். அல்லது ஹிஸ்டெரோ லாப்ரோஸ்கோபி முறைலிலும் இதைக் கண்டறியலாம்.

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின்போது சினைமுட்டை வருவதைத் தடுக்க, சினைக் குழாயில் முடிச்சு போட்டுவிடுவார்கள். கர்ப்பப்பை, கருப்பை குழாய் ஆகியவை நல்ல முறையில் இருக்குமானால் ரீகேனலைசேஷன் மைக்ரோ சர்ஜரி மூலம் சினைக்குழாயில் வழி ஏற்படுத்தி, சரி செய்ய முடியும்.

முதல் கருவை கலைத்துவிட்டால் அடுத்து குழந்தையே பிறக்காது என்பது உண்மையா?

முதல் கருவை கலைத்தால் அடுத்து குழந்தையே பிறக்காது என்பது உண்மையல்ல. கரு உண்டாவதைத் தடுக்க, மாதவிலக்கு சுழற்சியின் நடுவில் உள்ள 10 நாட்கள் பாதுகாப்பானவை என்று பலரும் எண்ணுகின்றனர். ஆனால் பலருக்கு மாதவிலக்கு சுழற்சி சீராக இருப்பது இல்லை. எனவே கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவது நல்லது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல