வெள்ளி, 16 ஏப்ரல், 2010

குளிக்கும்போது...

குளிப்பதற்கு முன் கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்றவும். கண்ட கண்ட ஷாம்புகளை உபயோகித்துப் பார்க்கும் ஆய்வுக்கூடமல்ல உங்கள் தலை. எனவே, உங்களுடைய தலைமுடிக்கு ஏற்ற ஷாம்புகளையே பயன்படுத்துங்கள். அதிக அளவில் ஷாம்பு பயன்படுத்துவதையும் தவிர்க்கவும். அதிக நுரை வந்தால்தான் முடி சுத்தமாகும் என்று எண்ண வேண்டாம். அதேபோல் ஷாம்பு தடவிய முடியை நன்றாக அலசவும்.

தலைக்கு குளிக்கும் ஒவ்வொரு முறையும் கண்டிஷனர் உபயோகிப்பது அவசியமான ஒன்று. கண்டிஷனரை முடியின் வேர்களை விட நுனிப்பாகத்தில் தடவுவது நல்லது. கண்டிஷனர் தடவிய பிறகும் முடியை நன்றாக அலச வேண்டும். தலைமுடியை ஷாம்பு போட்டுக் கழுவிய பிறகு, ஒரு டீஸ்பூன் வினிகரை ஒரு கப் நீரில் கலக்கி தலைமுடியைக் கழுவுங்கள். உங்கள் தலைமுடி மிருதுவாகவும், பட்டு போன்று பளபளப்பாகவும் இருக்கும்.

மருதாணியை தலையில் தேய்த்து ஊறவைத்த பின் ஷாம்பூ போடுவது தவறு. மருதாணி மிகச்சிறந்த கண்டிஷனர். எனவே மருதாணிக்குப் பிறகு ஷாம்பூ பயன்படுத்துவது நல்லதல்ல. ஆகவே, முதல்நாளே ஷாம்பூ போட்டு குளித்து முடியை நன்கு காயவைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் மருதாணி தேய்த்து ஊறவைத்து வெறுமனே அலசி விடலாம்.

குளித்த பிறகு ஈரத்துடன் முடியை சீவ வேண்டாம். ஈரமான கூந்தலை வேகமாகத் துவட்டுவதை தவிருங்கள். அதற்குப் பதிலாக உங்கள் கூந்தலை 5 நிமிடம் டவலில் சுற்றி வையுங்கள். ஹேர் ட்ரையரை, முடியின் நுனிப்பாகத்தைவிட வேர்ப்பாகத்தில் நன்றாகக் காட்டுங்கள்.

நுனிகளில் காட்டுவதால் முடி உலர்ந்து உடையக்கூடும். ஹேர் ட்ரையரை அடிக்கடி பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளவும். அப்படி பயன்படுத்தும்போது ஹேர் ட்ரையரை கீழ் நோக்கி பிடிக்கவும். அதேபோன்று ஒரே இடத்தில் அதிக நேரம் காட்டுவதையும் தவிர்க்கவும். உலர்ந்த கூந்தல் கொண்டவர்கள் அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டாம்.

குளிக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

1. காலை, மாலை இருவேலைகளும் குளிக்க ஏற்ற நேரங்கள். இடைப்பட்ட நேரங்கள் குளிப்பது நல்லதல்ல.

2. உணவு உண்ட பின்னரும், நன்றாக வியர்த்திருக்கும் போதும் குளிக்கக்கூடாது.

3. அஜீரணக்கோளாறு, கண் நோய், காய்ச்சல் ஆகிவற்றால் அவதிப்படும் நேரங்களில் குளிக்கக்கூடாது.

4. எண்ணெய் தேய்த்து விட்டு சிறிதுநேரம் கழித்து பின்னர் குளிப்பது உடலுக்கு நல்லது. இவ்வாறு குளிப்பதுதான் உடல்நலத்தைத் தரும்.

5. வாசனைப்பொடி, கடலைமாவு போன்றவற்றைத் தேய்த்து கழுவினால் அழுக்கும், எண்ணெய் பசையும் அகன்று போகும்.

6. சோப்பு உபயோகிக்கும்போது கழுத்து, கழுத்தின் பின்புறம், காது, கால்களின் இடுக்குப்பகுதிகள் போன்ற அழுக்கு படியக்கூடிய பகுதிகள் சோப்பை ஒருமுறைக்கு இருமுறை அழுத்தி தேய்த்து குளிக்க வேண்டும்.

7. சோப்பை அதிகமாக பயன்படுத்துவது உடலின் மேற்புறதோலுக்கு நல்லதல்ல. தோலில் இருக்கும் எண்ணெய்த்தன்மை மாறி வறண்டுவிடும்.

8. குளிக்கும் நீரில் சிறிதளவு எலுமிச்சம்பழச்சாற்றை பிழிந்து குளிக்கலாம். இது நல்ல புத்துணர்ச்சியைத் தரும்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல