1864 ஆம் ஆண்டின் செனீவாச் சாற்றுரையின் மூலப்பிரதி.
அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தின் நிறுவனரான என்றி துரந்த்தின் முயற்சிகளின் விளைவாக 1864 ஆம் ஆண்டுக்கும் 1907 ஆம் ஆண்டுக்கும் இடையில் செனீவாச் சாசனம் உருவானது. இச் சாசனம் ஆயுதப் போர்களில் ஈடுபடும் தனியாட்களது மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்தை உடையது. இது அனைத்துலகச் சட்டத்தில் போர், போர்க் குற்றங்கள் என்பன தொடர்பான சட்டங்களை முறைப்படுத்துவதற்கான முதல் முயற்சியாக அமைந்த 1899, 1907 ஆம் ஆண்டுகளின் ஏக் சாசனங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் விளைவாக இச் சாசனம் திருத்தப்பட்ட பின்னர் 1949 ஆம் ஆண்டில் மீண்டும் உலக சமுதாயத்தின் ஒப்புதல் பெறப்பட்டது.
செனீவா சாசனம், இன்று மனிதாபிமானச் சட்டம் எனக் குறிக்கப்படும் சட்டத்தை வரையறுக்கிறது. அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவே செனீவாச் சாசனத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பு ஆகும். உலக மனித உரிமைகள் சாற்றுரை
"இது ஒரு ஒப்பந்தம் அல்ல...[எதிர் காலத்தில், இது] உலகத்தின் சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம் ஆக உருவாகக் கூடும்." 1949 ஆம் ஆண்டில், உலக மனித உரிமைகள் சாற்றுரையின் எசுப்பானிய மொழிப் பிரதியுடன் எலினோர் ரூஸ்வெல்ட்.
உலக மனித உரிமைகள் சாற்றுரை என்பது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் நிறைவேற்றப்பட்ட கட்டுப்படுத்தாத ஒரு சாற்றுரை ஆகும். 1949 ஆம் ஆண்டில் இச் சாற்றுரை உருவாக்கப்பட்டதற்கு இரண்டாம் உலகப் போரில் இடம்பெற்ற அட்டூழியங்களும் ஒரு காரணமாகும். இது ஒரு கட்டுப்படுத்தாத சாற்றுரையாக இருப்பினும் தற்போதைய அனைத்துலக மரபார்ந்த சட்டத்தின் முக்கியமான கூறாக இது கருதப்படுகிறது. நாடுகளால் அல்லது பிற நீதித் துறைகளினால் பொருத்தமான வேளைகளில் இதனைப் பயன்படுத்த முடியும். விடுதலை, நீதி, உலக அமைதி என்பவற்றுக்கு அடிப்படையாக அமைபவை என்ற வகையில் சில மனித, குடிசார், பொருளாதார, சமூக உரிமைகளை முன்னெடுக்குமாறு உறுப்பு நாடுகளை இச் சாற்றுரை வேண்டுகிறது. நாடுகளின் நடத்தைகளைக் கட்டுப்படுத்தி அவற்றின் குடிமக்கள் பால் அவற்றுக்கு இருக்கக்கூடிய கடமைகளைச் செய்யுமாறு தூண்டும் முதலாவது உலகச் சட்டம் சார்ந்த முயற்சி இச் சாற்றுரை ஆகும்.
நகர்வுச் சுதந்திரம்
கர்வுச் சுதந்திரம், ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் செல்வதற்கான உரிமை, பயணம் செய்வதற்கான உரிமை என்பன மனித உரிமைகளாகக் கருதப்பட்டுப் பல நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களிலும் கூட இடம் பெற்றுள்ளன. இது ஒரு நாட்டின் குடிமக்கள் அந்த நாட்டைவிட்டு வெளியேறுதல், எங்கே அனுமதிக்கப்படுகிறார்களோ அங்கு பயணம் செய்தல், உரிய ஆவணங்களுடன் எந்நேரமும் நாட்டுக்குத் திரும்பி வருதல் என்பவற்றுடன், குறித்த நாட்டுக்குள்ளேயே தாம் விரும்பிய எந்த இடத்துக்குச் செல்வதற்கும், வாழ்வதற்கும், அங்கே வேலை செய்வதற்குமான உரிமைகளைக் குறிக்கிறது. இது அடிப்படை மனித உரிமையாக சிலரால் கருதப்படும் ஒரு சுதந்திரம் ஆகும். நாடுகளுக்கிடையே பயணம் செய்வதற்கும் வசிப்பதற்குமான முழுமையான சுதந்திரம் பெரும்பான்மையானோருக்கு இல்லை. இத்தகைய சுதந்திரம் வேண்டும் என்று சில அமைப்புகள் வலியுறுத்தி வந்த போதிலும், அந்தக் கோரிக்கைக்கு ஒரு நாட்டினதும், பன்னாட்டு அமைப்புகளினதும் ஆதரவு இல்லை. வெவ்வேறு வாழ்தரம் உள்ள நாடுகள், கீழ் வாழ்தரம் உள்ள நாடுகளில் இருந்து குடிவரவை விரும்பவதில்லை. முழுமையான சுதந்திரம் இருந்தால், நிலையான நிர்வாகம் செய்வதும் கடினாமக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
ஒரு குடிமை நாட்டுக்குள்ளேயே நகர்வதற்கு பெரும்பான்மை நாடுகளில் சுதந்திரம் உண்டு. எனினும் பல நாடுகளில் இச்சுதந்திரமும் இல்லை. குறிப்பாக சீனாவில் ஒரு கிராமத்தார் நகரத்துக்கு சுதந்திரமாக அனுமதி இன்று நகர முடியாது. நகர்வு சுதந்திரம் என்பது ஒரு தனிப்பட்டவரின் இடத்துக்குள் செல்வதற்கான சுதந்திரம் என்று பொருள் படாது.
D.திருச்செல்வி


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக