தன்னை விட 46 வயது இளமையான தனது பேரனான பில் பெய்லியுடன் (Phil Bailey, 26 வயது) காதல் வசப்பட்ட பேர்ள் கார்ட்டர் என்ற இந்தப் பாட்டி, தனது ஓய்வூதிய பணத்தில் 54,000 அமெரிக்க டொலரை ரொ ஸானி கம்பெல் (30 வயது) என்ற வாடகைத் தாய்க்கு கட்டணமாக செலுத்தி தனக்கும் தனது பேரனுக்குமென ஒரு குழந்தையை விரைவில் பெற்றெடுத்துக் கொள்ளவுள்ளார்.
இது தொடர்பில் பேர்ள் கார்ட்டர் (Pearl Carter) விபரிக்கையில், “எனக்கு எவருடைய அபிப்பிராயத்தைப் பற்றியும் அக்கறையில்லை. நான் பில்லை காதலிக்கிறேன். அவனும் என்னைக் காதலிக்கிறான். விரைவில் நான் மகனையோ அல்லது மகளையோ என் கரங்களில் ஏந்தவுள்ளேன். அக்குழந்தையின் பெருமைக்குரிய தந்தையாக பில் இருப்பான்'' என்று தெவித்தார்.
பேர்ள், தனது 18 ஆவது வயதில் திருமணமாகாமல் கர்ப்பமடைந்து பில்லின் தாயாரான லைனெட்டை பெற்றெடுத்தார்.
இந்நிலையில் பேர்ள், திருமணத்துக்கு அப்பாலான உறவு மூலம் முறைகேடாக பிறந்த லைனெட்டை தத்துக் கொடுக்க அவரது பெற்றோரால் நிர்ப்பந்திக்கப்பட்டார்.
அதன் பின் பேர்ள் தனது மகளைப் பார்க்கவேயில்லை.
குழந்தையை தத்துக் கொடுத்த பிற்பாடு திருமணம் செய்து கொண்ட பேர்ளுக்கு வேறு குழந்தைகள் எதுவும் பிறக்கவில்லை.
இந்நிலையில் தனது தத்துக் கொடுக்கப்பட்ட மகளைத் தேடும் முயற்சியில் பேர்ள் ஈடுபட்டார். ஆனால் அதனால் எதுவித பலனும் கிடைக்காமல் போகவும், அம்முயற்சியை 15 வருடங்களுக்கு முன் பேர்ள் கைவிட்டார்.
2006 ஆம் ஆண்டு லைனெட் மூளைப் புற்றுநோய் வந்து இறந்த போதே, பேர்ளுக்கு இறந்தது தனது மகளே என்பது தெரியவந்தது.
இதனையடுத்து பேர்ள் தனது மகள் வயிற்றுப் பேரனான பில்லை தன்னுடன் அழைத்து வந்தார். பில்லுடனான முதல் சந்திப்பு குறித்து பேர்ள் குறிப்பிடுகையில், ““நான் அவனைப் பார்த்த முதல் கணத்திலேயே எனக்கும் அவனுக்குமிடையே பாட்டி பேரன் உறவு ஒருபோதும் தொடரப் போவதில்லை என்று உணர்ந்தேன். அக்கணத்தில் பல வருடங்களுக்கு பின் முதல் தடவையாக பாலியல் ரீதியான உணர்வுகள் விழித்தெழுவதை உணர்ந்தேன். நான் பில்லை எனது படுக்கையறைக்கு அழைத்தேன். அவன் எனது விருப்பத்திற்கு ஒத்துழைத்தான்'' என்று கூறினார்.
““நான் இந்த உறவுக்காக மன்னிப்பு கேட்கப் போவதில்லை. ஏனெனில் கடவுள் எனக்கு கொடுத்த வாய்ப்பொன்றாகவே இதை நான் கருதுகிறேன்'' என்று அவர் கூறி னார்.
இந்நிலையில் பில் “நியூஸிலாந்திலிருந்து வெளிவரும் “நியூ ஐடியா' சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில், ““நான் பேர்ளை மனப் பூர்வமாக காதலிக்கிறேன். எனக்கு எப்போதும் வயதான பெண்கள் பால் ஈர்ப்பு அதிகம். பேர்ள் மிகவும் அழகாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. நான் தற்போது குழந்தையொன்றுக்கு தந்தையாகப் போகிறேன். என்னால் காத்திருக்க முடியாது'' என்று தெவித்தார்.
பேர்ள் மற்றும் பில்லின் இந்தக் காதல் தொடர்பு விவகாரம் குடும்ப உறவுகளின் உன்னதத் தன்மைக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளதென சக அமைப்புகள் பலவும் கண்டனம் தெவித்துள்ளன.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக