தற்போது ஹெயர் கலரிங், பலதரப்பட்ட கூந்தல் தன்மைகளுக்கு ஏற்ப, பல்வேறு வண்ணங்கள் மற்றும் தரங்களில் கிடைக்கின்றன. ஆனால் இது ஒருப்புறம் இருக்க கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்ற கேள்வி புதிதாக கூந்தலுக்கு கலரிங் செய்வோர் மத்தியில் எழுகிறது.
அதிகமான கலர் வகைகளை கூந்தலுக்கு உபயோக்கித்தல், ஏற்கனவே உபயோகித்ததை தவிர்த்து வேறு கலர்களை உபயோகித்தல் போன்ற காரணங்களால் போது பாதிப்பு ஏற்படும் சாத்தியம் அதிகம்.ஆனால் கூந்தல் கலரிங்கை தெரிவு செய்யும் போது நாம் கவனம் செலுத்துவது மிக முக்கியமானது.
இது உங்களது தோற்றத்தை வேறுப்படுத்திக்காட்டும் ஆனால் ஹெயார் டை வகைகளை பொறுத்து உடனடியான பெறுபேறை பெற்றுக்கொள்ளலாம். நிரந்தமான நிறங்கள் ( permanent ) , தற்காலிகமான நிறங்கள் (Semi-Permanent Colors) போன்ற நிறங்களை பொறுத்தது.
நிறந்தரமான நிறங்கள் (Permanent Tints)
நிறந்தரமான நிறங்களை கொண்டு டிண்ட் செய்வதுகூந்தலுக்கு உபயோகிக்கும் கலர் வகைகளில் hydrogen peroxide எனப்படும் பதார்த்தம் பயன்படுத்தப்படுவதால் கூந்தலுக்கு பயன்படும் கலர் வகைகளில் நிரந்தர தன்மையை ஏற்படுத்துகிறது.
தற்காலிக நிறங்கள்(Semi-Permanent Colors)
தற்காலிக நிறங்களில் hydrogen peroxide அளவு குறைவானதாகவே காணப்படுகிறது எனவே அது உபயோகிக்கும் கலர்களில் நிரந்தர தன்மையை குறைக்கிறது மேலும் கூந்தலுக்கு பாவிக்கும் சம்போ வகைகள், கூந்தலின் வளர்ச்சிகளினாலும் அவை நாள் அடைவில் இயற்கை தன்மையை இழக்கின்றன.
Semi-Permanent Vegetable Colors எனபப்டுவது இயற்கை பொருட்களை கொண்டு செய்யப்படுகின்றன இது கூந்தலுக்கு உபயோகிக்கும் ஹெனா (henna) வகைகளை சார்ந்தது.
ஹைலைட்டிங், ஸ்ட்ரீக்கிங், பிராஸ்டிங், பிங்கர் பெயின்டிங் ஆகியவை ஹேர் கலரிங் செய்யப்படும் பல்வேறு முறைகள் ஆகும்.கூந்தல் பல பாகங்களாக பிரிக்கப்பட்டு வண்ணங்கள் பூசப்படுவதற்கு "ஹைலைட்டிங்' என்று பெயர். பிரவுன் மற்றும் கோல்டன் நிறங்கள், மாநிற சருமத்தினருக்கும் சிவப்பு நிறம், நல்ல வெண்மையான சருமத்தினருக்கும் பொருத்தமாக இருக்கும் என, நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஹெயர் கலரிங் கூந்தலில் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என விரும்புகிறவர்கள், காப்பர் அல்லது சிவப்பு நிற கலரிங் செய்வதை முடிந்த வரை தவிர்க்கலாம். ஏனென்றால், இவை விரைவில், வெளிறிவிடும் தன்மை கொண்டவை.
ஹேர் கலரிங் செய்த பின்,அதற்கென தகுந்த ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களையே பயன்படுத்த வேண்டும். ஹெயர் கலரிங் செய்த பின், எவ்வாறு கூந்தலை பராமரிப்பது என்பதற்கு, கூந்தல் சிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை பெற்று செயல்படலாம். ஹெயர் கலரிங் செய்வதற்கு, பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் நல்ல தரமானது தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுவது நல்லது.நிரந்தரமான, வளமான தலைமுடி வேண்டும் என விரும்புவோர், " ஹெயர் கலரிங்' ஆசைக்கெல்லாம் அடிபணியக் கூடாது.
மங்கை



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக