இயேசுவின் துன்பத்தை இந்தப் புனித துணி நமக்கு ஞாபகப்படுத்துவதாக உள்ளதென பாப்பரசர் கூறினார்.
மேற்படி புனித துணியின் முன்பாக பல நிமிடங்கள் பிரார்த்தனையில் ஈடுபட்ட பாப்பரசர், பாரம்பய வழக்கப் பிரகாரம் அத்துணியை தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மனித உடலின் பிரதிமையொன்றைக் கொண்டுள்ள மேற்படி புனித துணி, கடந்த 10 ஆண்டுகளில் காட்சிப்படுத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
பொது மக்கள் பார்வைக்காக குண்டு துளைக்காத பெட்டியில் 6 வாரங்களுக்கு காட்சிப்படுத்தப்படும் இந்த புனித துணியை சுமார் இரு மில்லியன் மக்கள் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த துணியை 1988 ஆம் ஆண்டு பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அது மத்திய காலத்தைச் சேர்ந்தது என கருத்து வெளியிடப்பட்டது. ஆனால் அந்தத் துணியிலான காபன்களைப் பரிசோதித்தபோது அதன் காலம் வேறுபட்டதாக இருந்ததாக தெவிக்கப்படுகிறது.
இந்நிலையில் மேற்படி புனித துணி தொடர்பான விஞ்ஞான ரீதியான சர்ச்சை குறித்து பாப்பரசர் இதன்போது எதனையும் குறிப்பிட்டுக் கூறவில்லை.
பாரம்பய வழக்கப்படி இந்த புனித துணியை பேணுபவராக பாப்பரசர் விளங்குகின்றார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக