திங்கள், 3 மே, 2010

“குண்டு' என அழைத்த இளைஞனின் காதை கடித்துத் துப்பிய யுவதி

தன்னைக் “குண்டு' (உடல் பருமனானவர்) என அழைத்த 24 வயது இளைஞனின் வலது காதை யுவதி யொருவர் கடித்துத் துப்பிய சம்பவம், அமெரிக்க நெபீராஸ்கா மாநிலத்திலுள்ள லிங்கன் நக ரில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி சம்பவத்தையடுத்து அனா கோட்பிரே (Anna Godfrey ) என்ற மேற்படி யுவதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் காரை புளூட் தெவித்தார்.

காதில் இரத்தம் பெருக்கெடுத்தோட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞனின் துண்டிக்கப்பட்ட காதை கண்டுபிடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாகவும், வலது காது மடல் இல்லாமலேயே மேற்படி இளைஞன் தனது வாழ்நாளை கழிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பிறந்தநாள் விழாவொன்றின் போது மேற்படி இளைஞன், மேலும் இருவருடன் சேர்ந்து அங்கிருந்தவர்களை கேலி செய்து கொண்டிருந்த வேளையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல