இது தொடர்பான தகவல்கள் சனிக்கிழமை சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்பட்டன.
எனினும் ரஷ்யரான விளாடிமிர் குமென் யுக் (Vladmir Gumenyuk, 73 வயது) தகனம் செய்யப்பட்ட ஹிட்லன் சாம்பர் எங்கு தூவப்பட்டது என்பதை தெவிக்க மறுத்துள்ளார்.
மேற்படி இடமானது நாஸிகளின் யாத்திரை ஸ்தலமாக மாறி விடக் கூடும் என்பதாலேயே அந்த இடத்தை இரகசியமாகப் பேண தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார். 1970 ஆம் ஆண்டில் “ஹிட்லர்' அவரது வாழ்க்கைத் துணையான ஈவா பிறவுண் ஆகியோன் எலும்புகளையும் ஜோசப் கோப்பெல்ஸ் மற்றும் அவருடைய குடும்பத்தவர்களது எச்சங்களையும் தோண்டியெடுக்க அனுப்பப்பட்ட மூவரைக் கொண்ட குழுவில் இறுதி உயிர் வாழும் நபராக விளாடிமிர் குமென்யுக் விளங்குகிறார்.
““தமக்கு ஹிட்லரதும் அவரது சுற்றத்தவர்களதும் எச்சங்களை எரித்து வீச உத்தரவிடப்பட்டதாக விளாடி மிர் குமென்யுக் தெரிவித்தார்.
மேற்படி சாம்பரானது மொஸ்கோ அதிகாரிகளால் தீர்மானிக்கப் பட்ட இடத்தில் தூவப்பட்டதாக தெவித்த அவர், தாம் மீனவர்கள் போன்று வேடமிட்டே தமக்கு இடப்பட்ட உத்தரவை நிறைவேற்றியதாக கூறினார்.
அச்சமயத்தில் அங்கு எவரும் இருக்கவில்லை. அனைத்துக் காரியங்களும் 20 நிமிடத்தில் நிறைவேற்றப்பட்டன'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக