திங்கள், 3 மே, 2010

இது ஒரு முட்டாள்தனமான தீர்ப்பு

இறுக்கமான “ஜீன்ஸ்' அணிந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முடியாது

இறுக்கமான “ஜீன்ஸ்' ஆடை அணிந்த பெண், பாலியல் வல்லுறவுக்குட்பட முடியாது எனத் தெரிவித்து அவுஸ்திரேலிய சிட்னி நகர மாவட்ட நீதிமன்றம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிகொலஸ் எயுஜெனியோ கொன்ஸா லெஸ் (Nicholas Gonzales 23 வயது) என்ற இளைஞர் 24 வயது யுவதியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக தாக்கல் செய்த வழக்கை விசாரித்த 12 பேரைக் கொண்ட ஜூரர்கள் குழுவினர் மேற்படி கருத்தைத் தெவித்துள்ளனர்.

சம்பவ தினம் கொன்ஸாலெஸ், மேற்படி யுவதியை கட்டிலில் தள்ளி அவரது இறுக்க மான ஜீன்ஸையும், உள்ளாடையையும் அகற்றியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை செவிமடுத்த ஜூரர்கள், சம்பந்தப்பட்ட பெண்ணின் அனுமதியில்லாமல் மேற்படி இறுக்கமான ஜீன்ஸை நீக்குவது ஒருபோதும் சாத்தியமில்லை எனவும் அவர் இதன் போது சிறிது ஒத்துழைப்பாவது வழங்காமல் இருந்திருக்க முடியாது என்றும் கூறினர்.

இது தொடர்பில் பாதுகாப்புசபை அதிகாரி போல் ஹொகன் விபரிக்கையில், ““சுமார் 42 கிலோகிராம் நிறையுடைய மேற்படி யுவதி அணிந்திருந்த இறுக்கமான ஜீன்ஸை அகற்றுவது சம்பந்தப்பட்ட பெண்ணின் அனுமதியின்றி ஒருபோதும் சாத்தியமில்லை'' என்று கூறினார்.

இந் நிலையில் தேசிய பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான சேவைகள் சங்கத்தின் தலைவர் இதற்கு மறுப்புத் தெவித்துள்ளார்.

““பாலியல் வல்லுறவுக்கு குறிப்பிட்ட பெண் எத்தகைய ஆடையை அணிந்திருந்தார் என்பது இங்கு முக்கியமல்ல. பலவந்தப்படுத்தி எத்தகைய ஆடையையும் அகற்ற முடியும்'' என்று அவர் கூறினார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல