வெள்ளி, 18 ஜூன், 2010

நடிகை பரபரப்பு புகார்; நண்பர்களுக்கு என்னை விருந்தாக்க முயன்றார் கணவர்!

சமீபத்தில் வெளியான பட்டுவண்ணரோசாவாம் படத்தில் நடித்த நடிகை இந்திரா, கணவர் சதீஷ்குமர்,அவரது நண்பர்களுக்கு தன்னை செக்ஸ் விருந்தளிக்க வற்புறுத்தி கொடுமைப்படுத்துவதாக சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் கொடுத்தார்.

அவரைத் தொடர்ந்து சதீஷ்க்குமார், பணத்திற்காக, ஏற்கனவே கல்யாணம் ஆனதை மறைத்து இந்திரா என்னை ஏமற்றிவிட்டார் என நேற்று(17ந் தேதி) புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறிமாறி குற்றம் கூறியது,சென்னை போலீஸ் கமிஷ்னர்அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகை இந்திரா சதீஷ்குமார் பற்றி புகார் மனுவில், “சதீஷ்குமார் சாதாரண டிரைவராகதான் எனக்கு அறிமுகம் ஆனார். அவரை ரூ.7 ஆயிரம் சம்பளத்துக்கு வேலைக்கு சேர்த்துக்கொண்டேன்.

அவர் என் கார் டிரைவர். வேலைக்கு சேர்ந்த சில மாதங்களில் அவர் என்னிடம் உங்களை காதலிக்கிறேன் என்றார். ஆனால் நான் அவர் காதலை ஏற்கவில்லை.

நான் நடிகை என்பதால் அவரை திருமணம் செய்து கொள்ள தயங்கினேன். ஆனால் அவர் விடாமல் என்னிடம் காதலிப்பதாக கூறினார். என்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார்.

3 தடவை அவர் தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார். நான்தான் அவரை காப்பாற்றினேன்.

கோழிக்கறி வாங்கி வந்து பொரித்துக் கொடுக்கச் சொல்வார். போதை தலைக்கேறியதும் என்னை நண்பர்கள் முன்பு ஆபாச நடனம் ஆடும்படி வற்புறுத்துவார்.

ஆனால் நான், நடனம் ஆட முடியாது என்று கூறிவிடுவேன். இதனால் என்னை அடிப்பார். என்னை நண்பர்களுக்கு விருந்தாக்கவே அவர் இப்படி திட்டம் தீட்டியது பிறகுதான் தெரிந்தது. நான் ராயப்பேட்டையில் உள்ள கிளப்பில் ஆபாச நடனம் ஆடுவதாக பொய் புகார் கூறியுள்ளார்.

அவர்தான் கோடம்பாக்கத்தில் நான் சதீஷ்குமாருடன் வாழ விரும்பவில்லை. அவரிடம் இருந்து விவாகரத்து பெற மனு செய்துள்ளேன். மீண்டும் நான் சினிமாவில் நடிப்பேன்” என அழுதபடி கூறியுள்ளார்.

ஆனால், சதீஷ்குமார், இந்திராவைப் பற்றி, ’’கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நெய்வேலியில் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள நான் சென்று விட்டேன்.

திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் இந்திராவை காணவில்லை. இந்திராவிடம் செல்போனில் தொடர்பு கொண்ட போது, “நான் கர்ப்பமாக உள்ளேன். 2 நாட்கள் என் தாய் வீட்டில் ஓய்வு எடுத்து விட்டு வருகிறேன்” என்றார்.

தொடர்ந்து நான் அவரை போனில் அழைத்தும் அவர் குடும்பம் நடத்த வரவில்லை. திடீரென ஒரு நாள் அவரது வக்கீல் என்று கூறி ஒருவர் என்னிடம் பேசினார். உடனடியாக உன் சொத்தைப்பிரித்து விட்டு வா, இல்லை என்றால் உன்னையும் உன் குடும்பத்தினரையும் ஜெயிலில் தள்ளி விடுவோம் என்று மிரட்டினார்.

அப்போது தான் சொத்துக்காக அவர் என்னை காதலித்தது தெரிய வந்தது. அதையடுத்து அவரை பற்றி நான் விசாரித்தேன். இந்திரா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதை அறிந்தேன்.

நம்மாழ்வார் பேட்டையைச் சேர்ந்த மகேஷ் என்பவரை 1996-ம் ஆண்டு அவர் திருமணம் செய்து 1 1/2ஆண்டு குடும்பம் நடத்தியதை கண்டு பிடித்தேன். பிறகு மகேசை துரத்தி விட்டு ஆபாச படங்களில் அவர் நடித்ததாக கூறப்படுகிறது.

காபரே நடனக்குழுவிலும் அவர் இருந்துள்ளார்.என்னை ஏமாற்றும் நோக்கத்துடன் முதல் திருமணத்தை மறைத்து சொத்துக்காக என்னை திருமணம் செய்து கொண்டது அம்பலமானது’’என்று கூறியுள்ளார்.

பட்டுவண்ண ரோசாவாம் படத்தில் 2 பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல