வியாழன், 22 ஜூலை, 2010

23வது கணவருடன் இணைந்துள்ள 108 வயது மாது

23 தடவைகள் திருமணம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 108 வயது மலேசிய வயோதிப மாதான வூக் குன்டர் (Wook Kundor), குழந்தையொன்றை பெற்றுக் கொள்ளும் முகமாக தனது 23 ஆவது கணவருடன் மீள இணைந்துள்ளார்.

இது தொடர்பான தகவல்கள் மலேசிய “த ஸ்டார்' ஊடகத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.
வூக் குன்டருடன் மீள இணைந்து புது வாழ்க்கையை ஆரம்பிக்கத் தீர்மானித்தமை குறித்து அவன் 23 ஆவது கணவரான மொஹ்மட் நூர் சேஸா (Muhammad Noor Che Musa,38 வயது) விபரிக்கையில், தன்னுடைய வீட்டில் மழலையொன்று தவழ வேண்டும் என்ற தனது மனைவியின் விருப்பத்தை திருப்தி செய்ய ஆவலுடன் இருப்பதாகக் கூறினார். ““நாங்கள் ஏற்கனவே இதற்காக (குழந்தைக்காக) முயற்சித்தோம்.

ஆனால் எனது மனைவியின் வயது தடையாக இருந்தது. அதனால் நாங்கள் ஆண் குழந்தை யொன்றை தத்தெடுத்து வளர்க்கத் தீர்மானித்துள்ளோம்'' என்று மொஹ்மை நூர் சேஸா தெவித்தார்.
மொஹ்ட் நூர், போதைவஸ்துக்கு அடிமையான நிலையில் 18 மாத சிகிச்சை பெற்று அண்மையிலேயே வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

குழந்தையொன்றின் பிரசன்னமானது கோலா பெராங் நகரிலுள்ள கம்புங் புகித் டொக் பட் எனும் இடத்திலுள்ள தமது இல்லத்தை மகிழ்ச்சிகரமாக ஒன்றாக மாற்றும் என நம்புவதாக மொஹ்மட் நூர் குறிப்பிட்டார்.

தனது மனைவி குழந்தையொன்று வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பதாகவும் குழந்தைக்கான பொருட்களை சேகரிப் பதில் மிகவும் நாட்டங் காட்டுவதாகவும் அவர் கூறினார்.

போதைவஸ்துக்கு அடிமையானமை காரணமாக தனக்கும் தனது மனைவிக்குமிடையே கருத்து முரண்பாடு நிலவி பிரியும் நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவித்த மொஹ்மட், சிகிச்சைக்கு பின் தனது நிலை மாறியுள்ளதாக தெவித்தார்.

““நான் இப்போது ஒரு மாறிய மனிதன்.
நான் எனது மனைவியுடன் கழிக்கும் ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சிகரமாக உணர்கிறேன்'' என்று அவர் கூறினார்.

மொஹ்மட் நூர் 5 வருடத்திற்கு முன் தனது இளமையான மனைவியிடமிருந்து விவாகரத்துப் பெற்று வயோதிப வூக் குன்டரை திருமணம் செய்ததன் மூலம் உல களாவிய ரீதியில் பரபரப்பாகப் பேசப்பட்டார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல