வியாழன், 22 ஜூலை, 2010

பம்பாய் அழகி ரீட்டா ஜோன் கொலை வழக்கு

எதிரிகள் மூவர்
இற்றைக்கு ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பு மாநகர சபைக்கு முன்னால் இரவு வேளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனத்தின் உள்ளே இருந்த இருவரில் ஒருவரான டாக்டர் பந்துல பாதையால் சென்ற ஒருவனின் கத்திக் குத்துக்கு இரையாகினார். உள்ளே இருந்த பெண் தப்பி பிழைத்துக் கொண்டாள். கொலையாளி நீதிமன்றத்தில் தனது பாதுகாப்பை கூறும் போது கூறியது என்னவெனில் காருக்குள் இருந்தவர்களது செயல் எனது உணர்ச்சியை தூண்டியது. அதனால் உணர்ச்சி வசப்பட்ட நான் டாக்டரை கொலை செய்தால் எனது எண்ணம் நிறைவேறும் என தவறுதலாக நினைத்தேன். ஆனால் பெண் தப்பி விட்டாள் என்று கூறினான்.

பம்பாய் அழகி ட்டா ஜோனின் வழக்கிலும் இதுவே நடந்தது. இளம் தம்பதிகளான மனோகரனும் ரீட்டாவும் உல்லாசமாக உலாவுவதற்கு முகத்துவாரத்தில் உள்ள காக்கைத்தீவு கடற்கரையை அண்டிய பகுதியை தெந்தெடுத்தனர். அப்பகுதியோ பயங்கரமான பகுதியாகும். பற்றைகளும் ஓரளவு உயரமான மரங்களும் நிறைந்த பகுதியாகும். அத்துடன் சதுப்பு நிலமானதாக இருப்பதாலும் பலர் அப்பகுதிக்கு வருவதில்லை.

சில வேண்டாத பேர் வழிகளே அப்பாதையால் நடப்பது வழக்கம். ரீட்டா தம்பதிகள் கணவன் மனைவி ஆதலால் யாருக்கும் பயந்து உலாவ தேவையில்லாதபடியால் இப்பகுதியால் உலாவி தமது வீட்டுக்கு வந்தனர். ஆனால் காமுகர்கள் மூவர் ரீட்டா ஜோனின் உயிரைப் பறித்துக் கொண்டனர். ஆக வே இவற்றிலிருந்து நாம் படிக்க வேண்டிய படிப்பினை என்னவென்றால் மற்றவர்களது தகாத இச்சையை தூண்டக் கூடிய சந்தர்ப்பங்களை நாம் உண்டாக்கிக் கொள்ளக் கூடாது என்பதேயாகும். இது மனிதர்களின் சுதந்திரத்திற்கு சவால் என்பது உண்மையாயினும் எமது உயிருக்கும் சவாலாக சில சமயம் அமைந்து விடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இனி வழக்கின் நிகழ்வுகளுக்கு வருவோம்.

வழக்கின் நிகழ்வுகள்

ரீட்டா ஜோன் ஓர் இந்தியப் பிரஜையாகும். பம்பாயில் வசிப்பவளாகும். மோகன் சுனந்திரன் மனோகரன் என்ற இலங்கைப் பொறியியலாளர் ஒருவரை 12.09.1998 இல் மணந்தாள். இவர்களது திருமணம் இந்தியாவில் உள்ள மனிப் (Maniff) என்னும் ஊரில் உள்ள புனித மைக்கல் தேவாலயத்தில் நடந்தது.
விவாகமாகி ஒரு வாரத்தில் புதுமணத் தம்பதிகள் இலங்கைக்கு வந்து மனோகரனின் தகப்பனரது வீட்டில் வசிக்கத் தொடங்கினர்.
மனோகரனின் தகப்பன் ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சர் மோதரையில் காக்கைதீவில் வசித்து வந்தார்.

காக்காய்தீவு கிட்டத்தட்ட களனி கங்கை ஆற்றிலிருந்து அறுபது ஏக்கர்களை கொண்ட ஒரு பகுதியாகும். இதன் கிழக்குப் பகுதியில் கிட்டத்தட்ட 16 ஏக்கர்கள் காடுகள் உண்டு.

இப்பகுதியில் அடர்த்தியான மரங்களும் நீர் வளத்தால் செழித்து வளர்ந்த பற்றைக் காடுகளும் உள்ளன. இதனால் சூரிய வெளிச்சம் தெளிவில்லாமல் இப்பகுதியில் விழுவது வழக்கம். ஆகவே மொத்தத்தில் இப்பகுதி இருட்டாகவே இருக்கும். விசேடமாக மாலை வேளையில் மிக இருட்டாக இருக்கும். இக்காட்டின் இடையில் நீர் ஓடை ஒன்று ஓடுகின்றது.

1998.10.11 ஆம் திகதி பி. பகல் (மாலை) 6.15 மணியளவில் ரீட்டா ஜோனும் அவரது கணவரும் உல்லாசமாக உலாவி வருவதற்காக களனி ஆற்றுப் பக்கமாக இப்பகுதியின் ஊடாக சென்றனர். கிட்டத்தட்ட 10 அல்லது 15 நிமிடங்கள் உலாவியதன் பின்னர் வீடு திரும்பினர். கங்கை ஓரமாக இருந்த பகுதியால் வீடு திரும்பினர். கடலைப் பக்கற்றை ஒருவனிடம் வாங்கி கடலையை கொறித்துக் கொண்டே இவர்கள் நடந்தனர். கிட்டத் தட்ட 200 க்கும் 300 க்கும் இடைப்பட்ட மீற்றர் தூரத்தை கடந்த போது தமக்கு முன்னால் எதிராக மூன்று பேர் வருவதை அவர்கள் கண்டனர். இரண்டு உயரமானவர்களும் ஒரு கட்டையாளுமாக அவர்கள் இருந்தனர். உயரமான மனிதன் பொனிரெயில் (Pony Tail) கட்டியிருந்தான். நீலநிற T சேட்டும் நீலநிற டெனிம் கால்சட்டையும் அணிந்திருந்தான். மற்ற உயரமானவன் கறுப்பு T சேட்டும் கறுப்பு நிற டெனிம் கால்சட்டையும் அணிந்திருந்தான். மூன்றாவது ஆள் கட்டையான நீல நிற டெனிம் கால்சட்டையும் V சேப்பிலான T சேட்டையும் அணிந்திருந்தான்.
இவர்களே பின்னர் 1 ஆம், 2 ஆம், 3 ஆம் எதிரிகள் என அடையாளம் காணப்பட்டனர்.
27.10.1998 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அடையாள அணி வகுப்பில் மனோகரன் இவர்களே கடற்கரையில் தம்மை தாக்கியவர்கள் என அடையாளம் காட்டினார். மூன்று எதிரிகளும் ரீட்டா ஜோனுக்கு எதிரில் வரும் போது மூன்றாம் எதிரி அவளது கையைப் பிடித்து இழுத்தான். மனோகரன் அவளை விடுவித்ததுடன் 3 ஆம் எதிரியிடம் நீ என்ன செய்கிறாய் என்றும் கேட்டார். 3 ஆம் எதிரி மனோகரனுக்கு தகாத வார்த்தைகளால் பேசி விட்டு அவ்விடத்தில் இருந்தும் சிறிது தூரம் சென்றனர்.

கிட்டத்தட்ட 2 1/2 யார் தூரம் போனதன் பின்னர் மூவரும் ரீட்டா ஜோனின் பக்கம் திரும்பி ஓடி வந்தனர். உடனே மனோகரன் தனது மனைவியிடம் அவ்விடத்திலிருந்து ஓடுமாறு கூறினார். மனைவி ஓடத் தொடங்கவே பொனிரைல் கட்டியவன் அவளை துரத்திச் சென்று கீழே தள்ளி விட்டு தன்னிடம் பிஸ்டல் இருப்பதாகவும் ஓடினால் சுடுவதாகவும் கூறினான். மற்ற இருவரும் மனோகரனின் கழுத்தை நெரித்துக் கொண்டும் காலால் அவனது ஆண் உறுப்புப் பகுதிக்கு உதைத்துக் கொண்டும் இருந்தனர். இதனால் மனோகரனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ரீட்டா மனோகரனின் பெயரைச் சொல்லி கூப்பிடும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. மனோகரன் தன்னைத் தாக்கிய இருவரையும் சமாளித்துக் கொண்டு தனது வீட்டிற்கு ஓடிச் சென்று தனது தந்தையிடம் கூறவே தந்தை அயல் வீட்டார் பத்து பதினைந்து பேருடன் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு மனோகரனுடன் வந்தனர். குறுகிய நேரத்திற்குள் மோதரை பொலிஸ் உத்தி யோகத்தர்களும் சில இராணுவத்தினரும் அவ்விடத்திற்கு வந்து ரீட்டா ஜோனையும் மூன்று எதிகளையும் தேடினர்.

நேரம் இருட்டாக இருந்தபடியால் அவர்களது முயற்சி பலன் அளிக்கவில்லை. பொலிஸாரினால் கண்டு எடுக்கப்பட்ட T சேர்ட் ஒன்றும் ஒரு சோடி செருப்பும் மனோகரனுக்கு காட்டப்பட்டது. அது தனது மனைவியினது என்று மனோகரன் அடையாளம் காட்டினார். அன்று இரவு 11 மணி வரையும் தேடுதல் நடத்தப்பட்டது. ஆனால் ரீட்டாவையும் எதிகளையும் கண்டுபிடிக்க முடியாமல் போனது.

மறுநாள் காலையிலும் பொலிஸாரும் அயலவரும் மீண்டும் தேடத் தொடங்கினர்.
ஆனாலும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. பி.பகல் 2 மணியளவில் 13.10.1998 இல் ரீட்டாவின் உடல் நிர்வாணமான நிலையில் நீரோடைக்குள் கிடந்ததைக் கண்டனர்.
காக்கைத்தீவில் உள்ள “நாறா' என்ற கட்டிடத்திற்குப் பின்னால் உள்ள ஓடையில் இவ்வுடல் கிடந்தது. பொலிஸார் உடலை நீர் ஓடையில் இருந்து வெளியே எடுத்தனர்.
அவளது உடலில் இருந்த நகையும் இருக்கவில்லை. ஆனால் காதில் அணிந்திருந்த ஜிப்சி 'Gypsy' மட்டும் காதில் இருந்தது.

ரீட்டாவை கடத்தும் போது அவள் தாலி அணிந்திருந்தாள் என்றும் கல்யாண மோதிரம் டைமனிலான வேறு ஒரு மோதிரம், மாலை, பென்டன் காப்பு என்பன அணிந்திருந்தாள் என்றும் மனோகரன் பொலிஸாருக்கு தெவித்தார். அத்துடன் டெனிம் கால் சட்டையும், மெல்லிய பச்சை நிற T சேட் பொத்தான் இல்லாதது மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மார்புக் கச்சை (Brassier) யும் சிங்கப்பூரில் வாங்கிய சாம்பல் நிறத்திலான உள்ளங்கி (Underwear) யையும் அவள் உடுத்தியிருந்ததாகவும் மனோகரன் பொலி ஸாருக்கு தெriவித்தார். இவை ஒன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஜிப்ஸி மட்டுமே இருந்தது.

பொலிஸார் மிகத் திறமையான புலன்வி சாரணையின் பின்னர் 2 ஆம், 3 ஆம் எதிரிகளை கைது செய்து வாக்கு மூலம் எடுத்தனர். வாக்குமூலத்தின் பின்னர் ரீட்டாவின் உடல்கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் மரண விசாரணை நடந்தது. 14.10.1998 இல் போஸ்மாட்டம் (Post Mortem) நடத்தப்பட்டது. ரீட்டாவின் உடலில் பல காயங்கள் இருந்தன. அவளது அந்தரங்க உறுப்பு பலமாக பாதிக்கப்பட்டிருந்தது. வெளிப்படையாக அந்த விபரத்தை இங்கு கூற முடியாமல் இருக்கிறது. காமுகர்களின் பசி அங்கு தீர்க் கப்பட்டதற்கான அறிகுறி இருந்தது.

ரீட்டாவின் மரணம் அதிர்ச்சியாலும் தொண்டையை இறுக்கியதாலும் நடந்தது என மரண விசாரணையில் டாக்டர் தெரிவித்திருந்தார். மரணமானது இந்த உடலை போஸ்மாட்டம் செய்வதற்கு 36 40 மணித்தியாலங்களுக்கு முன்னர் நடந்திருக்க வேண்டும் என்றும் டாக்டர் கணிப்பீடு செய்திருந்தார். இறப்பதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் கடலை உண்டதற்கான ஆதாரம் இரைப்பையில் இருந்தது. மனோகரனும் அவரது தம்பியும் அந்த உடல் ரீட்டாவினு டையது என்று அடையாளம் காட்டினர்.
தண்ணீருக்குள் உடல் போடப்பட்டு இருந்ததால் அது ஊதி இருந்தது.

மோதரை பொலிஸ் பிரதம அதிகாரி ரஞ்சித் தெஹிதெனியாவும் அவரது சகாக்களும் மிகச் சிரமத்திற்கு மத்தியில் எதிரிகளை அடையாளம் கண்டு கைது செய்தனர். எதிரிகளின் நண்பல் ஒருவரான லக்ஷ்மன் பெரேரா முதலில் கைது செய்யப்பட்டார்.

ஆனால் அவர் இக்கடத்தலில் அல்லது கொலையில் சம்பந்தமில்லாததால் சட்டமா அதிபர் அவரை அரசு தரப்பு சாட்சியாக மாற்றினர்.

அதன் பின்னர் மற்ற எதிரிகள் மூவரும் கைது செய்யப்பட்டனர். 2 ஆம், 3 ஆம் எதிகள் அளித்த வாக்கு மூலத்தில் இருந்து ஜோன் ரீட்டாவின் உடல் கண்டுபி டிக்கப்பட்டது.

1 ஆம் எதியின் வாக்குமூலத்தின் பின்னர் ரீட்டாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு சமீபமாக உள்ள கொட்டன் மரத் (Kottan Tree) தின் கீழ் ரீட்டா அணிந்திருந்த டெனிம் கால்சட்டையும் அவள் அணிந்திருந்த உள்ளங்கி (Underwear) யும் பொலிஸார் கண்டு எடுத்தனர்.

அவளது கையில் இருந்த காப்புகள் 1 ஆம் எதிரியின் வீட்டில் இருந்தது. இதனை மனைவி பொலிஸாருக்கு கொடுத்தாள்.

2 ஆம் எதிரியின் வாக்குமூலத்தின் பின்னர் ரீட்டாவின் தாலியும் பென்டனும் அவனது வீட்டுக் கூரைக்குள் இருந்து எடுக்கப்பட்டது.
ஆகவே ரீட்டா கொலையுடன் தொடர்புடைய பொருட்கள் அனைத்தும் 1 ஆம், 2 ஆம் 3 ஆம் எதிரிகளின் வாக்குலத்தில் இருந்து கிடைக்கப் பெற்றது. சாட்சியியல் சட்டத்தின் 27 ஆம் பிரிவின் கீழ் இது நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டது. இதனால் கொலைக்கு இவர்களே காரணம் என சட்ட மா அதிபர் தீர்மானித்து இவர்களை நீதி ஆயம் Trial - At - Bar முன் விசாரணைக்கு வைத்தார். 3 நீதியரசர்களால் விளங்கப்பட்ட இவ் விசாரணையில் மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் இருபது வருடகால கடூழியச் சிறைத்தண்டனையும் பாலியல் வல்லுறவுக்கு விதிக்கப்பட்டது.

எதிரிகள் தமது தண்டனையை எதிர்த்து மேன்றையீடு செய்தனர். மேன்றையீட்டுக்கு காரணமாயிருந்தது இக்குற்றச்சாட்டுக்களுக்கு ஆரம்பத்தில் காரணமாயிருந்த லக்ஷ்மன் பெரேராவை சாட்சியாக கூப்பிடவில்லை என்பதாகும். உண்மையில் பொலிஸார் மேற்படி குற்றத்திற்கு முதன் முதலாக லக்ஷ் மன் பெரேராவையே கைது செய்தனர்.

ஆனால் அவனை வைத்திய அதிகாரியின் முன்னிலையில் பரிசோதனைக்கு அனுப்பிய போது அவனது உடலில் எந்தவித கீறலோ காயமோ இல்லாமல் இருந்தது என வைத்திய அதிகாரிதெவித்தார். அடையாள அணி வகுப்பிலும் லக்ஷ்மன் பெரேராவை மனோகரன் காண்பிக்கவில்லை. வழக்கிற்குத் தேவையான எந்தவொரு தடயப் பொருளும் (Productions) இவனிடமிருந்து கிடைக்கவில்லை. இவன் குற்றம் நடைபெற்ற இடத்தில் இருந்து கைது செய்யப்பட்டாலும் குற்றத்தில் சம்பந் தப்படவில்லை. ரீட்டா கொலை செய்யப் பட்டு போட்ட இடம் லக்ஷமனுக்கு தெரியாது இருந்தது. இவனே ஏனைய எதிரிகளை காட்டிக் கொடுக்க உதவியாயிருந்தார். ஆகவே அவர் சந்தேக நபராக இருக்க முடியாது என ஐந்து உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஏகமனதாக தீர்மானித்து மேன்றையீட்டை தள்ளுபடி செய்தனர்.

குற்றவாளிகள் மரண தண்டனையை எதிர் நோக்கிய வண்ணம் இருக்கின்றனர்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல