வியாழன், 22 ஜூலை, 2010

அல்ஸருக்காக சிகிச்சை பெற வந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிரசவம்

தான் கர்ப்பமடைந்துள்ளதை அறியாது வயிற்றில் அல்சர் ஏற்பட்டுள்ளதாக தவறுதலாக நினைத்து சிகிச்சை பெற வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் நான்கு மணித்தியாலங்களில் ஆண் குழந்தையொன்றை பிரசவித்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

எஸெக்ஸிலுள்ள ரொம்பீல்ட் எனும் இடத்தில் வசிக்கும் லிஸா விட்சல்ஸ், தனக்கு ஏற்பட்ட பிரசவ வலியை வயிற்று வலியென நினைத்து தனது காதலரிடம் “அம்புலன்ஸ்' வண்டியை வரவழைக்கக் கோரியுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே தான் நிறைமாதக் கர்ப்பிணியாக உள்ளமை அவருக்கு தெரியவந்துள்ளது.
அவருக்கு கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பசோதனைகளின் பிற்பாடு அவரது கர்ப்பப்பையில் குறைபாடு இருப்பதால் அவரால் குழந்தையொன்றை பிரசவிப்பது சாத்தியமில்லை என மருத்துவர்கள் கையை விரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதைத் தொடர்ந்து கடந்த 9 மாத காலப்பகுதியில் கர்ப்பமடைந்திருப்பதாக சந்தேகித்து லிஸா செய்து கொண்ட 4 வெவ்வேறு மருத்துவ பரிசோதனைகளும் அவர் கர்ப்பமடையவில்லை என்றே தெரிவித்தன.
இந்நிலையில் அல்சருக்கு சிகிச்சை பெற வந்த தனக்கு அழகிய ஆண் குழந்தை யொன்று பிறந்திருப்பது தொடர்பில் லிஸா இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல