வியாழன், 22 ஜூலை, 2010

40 பூனைகளை அபகரித்து மனைவியை விட்டுச்சென்ற தூதுவர்

இஸ்ரேலுக்கான லத்தீன் அமெரிக்கத் தூதுவர் ஒருவர், தனது மனைவிக்கு எதனையும் விட்டு வைக்காமல் அவரது சொந்த உடைமையான 40 பூனைகளையும் இரு நாய்களையும் அபகரித்துக் கொண்டு கம்பி நீட்டிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பாவிற்கான பயணத்தை மனைவி மேற் கொண்டிருந்த போது வீட்டிலுள்ள தளபாடங்கள் உட்பட அனைத்தையும் மேற்படி தூதுவர் எடுத்துச் சென்றுள்ளார். வீடு திரும்பிய மனைவி தனது ஆடைகள், நகைகள் உட்பட அனைத்தையும் தனது கணவர் எடுத்துச் சென்றதுடன் அவருக் கான கடனட்டை மற்றும் காப்புறுதியும் கணவரால் இரத்துச் செய்யப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

தனது பொருட்களை இழந்ததை விட தான் அன்புடன் வளர்த்த 40 பூனைகளையும் இரு நாய்களையும் கணவர் எடுத்துச் சென்றதுதான் தனது மனதை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். இந்நிலையில் அவர் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சட்டக் காரணங்களுக்காக தூதுவர் மற்றும் அவரது மனைவியின் பெயர்களை வெளியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல