24 மணி நேரம் பாடுபட்டு 6 அடி அகலம் 18 அங்குல தடிப்புடைய மேற்படி உணவை இந்த சமையல் கலை நிபுணர்கள் தயாரித்துள்ளனர்.
30 இறாத்தல் மா, 5 இறாத்தல் சீனி, 20 பைந்து பால், 40 இறாத்தல் கிறீம், 30 இறாத்தல் ஜாம் என்பனவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த உணவுடன் இராட்சத கிண்ணத்தில் தேநீரும் வைக்கப்பட்டது.
டெவொனில் பெயின்டன் நகரிலுள்ள “ஹால்லெட்ஸ் த பேக்கர்ஸ்' நிறுவனத்தைச் சேர்ந்த சமையல் கலை நிபுணர்களால் இந்த உணவு தயாரிக்கப் பட்டது. 230 பாகை செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலையில் இந்த உணவு சமைக்கப்பட்டது.
இதற்கு முன் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் உலகின் மிகவும் பெய தேநீர் உணவாக இடம்பிடித்துள்ள 2 அடி அகலமான உணவின் சாதனையை இந்த புதிய தேநீர் உணவு முறியடித்துள்ளது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக