சிலர் தனது உடல் அமைப்பை வைத்து கவலைப் படுவது உண்டு. ஆனால் அந்த உடல் அமைப்பே உலகத்தையை வியக்க வைக்கின்றது என்பது உண்மை.
அந்த வகையில் உலகில் குள்ளமான மனிதராக இருந்த பிங்பிங் கடந்த மார்ச் மாதம் இறந்து விட்டார். இதையடுத்து உலகில் குள்ளமான மனிதர் என்ற இடத்தை சீனாவை சேர்ந்த ஹவுங் கைகான் (Huang Kaiquan) பிடித்துள்ளார்.
அவரது வயது 40. இவருடைய உயரம் 76 சென்டி மீட்டர். பிங்பிங்கை விட இவர் 1.4 சென்டி மீட்டர் அதிக உயரமாக இருக்கிறார். இவர் பிறந்து 1 மாதம் வரை உடல வளர்ச்சி இருந்து உள்ளது. 1 மாதத்துக்கு பிறகு உடல் வளர்ச்சி முற்றிலும் நின்று விட்டது. இப்போது அவர் ஒரு வயது குழந்தைகள் அணியும் ஆடையையே அணிகிறார். தனது தாயாருடன் வசித்து வரும் இவர் மேஜிக் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.


.jpg)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக