திங்கள், 2 ஆகஸ்ட், 2010

முந்திரி

எதையாவது துடுக்குத் தனமாகவோ அல்லது முந்திக் கொண்டோ செய்பவர்களை முந்திரிக் கொட்டை என்று திட்டுவார்கள். அதற்குக் காரணம் முந்திரிப் பழத்தைப் பார்த்தாலே புரிந்துவிடும்.

பொதுவாக ஒரு பழத்தின் விதை பழத்திற்குள்தான் இருக்கும். ஆனால் முந்திரி கொட்டை மட்டும் பழத்திற்கு வெளியே இருக்கும். சரி இந்த முந்திரியின் பூர்வீகம் எமது தெரியுமா? பிரேசில் முந்திரிப் பழம் ஒரு பொய்க் கனியாகும். பழம் போலத் தோன்றினாலும் அது உண்மையில் பழம் இல்லை. இந்த பழத்தின் வெளியே முந்திரிக் கொட்டை உருவாகும். முந்திரியைப் பாதுகாக்கும் வகையில் அமைந்திருக்கும் இந்த பழத்தின் திரவம் தோலில் பட்டுவிட்டால் எரிச்சலையும், கொப்புளத்தையும் ஏற்படுத்திவிடும். பிரேசில் பூர்வீகமாக இருந்தாலும் உலகளவில் முந்திரி அதிக பரப்பளவில் பயிரிடப்படுவது இந்தியாவில்தான். ஆனால் இங்கு விளைச்சல் குறைவாகவே உள்ளது.

முந்திரிப் பழத்தில் இருந்து முந்திரித் கொட்டையை மனிதர்களால் பிரிக்க முடியாது. எனவே மூடப்பட்ட உரளைக்குள் முந்திரிக் கொட்டைகளைப் போட்டு, உருளையை சூடுபடுத்துவார்கள். அப்போது அந்த பழம் வெடித்து முந்திரி தனியாக பிரியும்.

முந்திரிக் கொடைத் திரவமும் பல்வேறு விதங்களில் பயன்படுத்த ப்படுகிறது. உண்மையில் முந்திரியும் நச்சுத்தன்மை வாய்ந்த ஜவி என்ற தாவரமும் ஒரே குடும்பத் தைச் சேர்ந்தவைதான்.

பலருக்கும் முந்திரி விதையால் ஒவ்வாமை ஏற்படுகிறது. ஆனாலும் எல்லா கொட்டை வகைகளையும் எடுத்துக் கொண்டால் முந்திரி விதை குறைந்த அளவு ஒவ்வாமை கொண்டதாக உள்ளது. நிலக்கடலைதான் அதிக ஒவ்வாமை தன்மை கொண்ட பருப்பு வகையாகும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல