திருமணத்தில் செல்சியா பிரபல ஆடை நிபுணர் விரா வாஷ் வடிவமைத்திருந்த கவுனை அணிந்திருந்தார். இது திருமணத்துக்கு வந்திருந்த அனைவரையும் கவர்ந்தது.
திருமணத்துக்கு, பிரபல ஹாலிவுட் டைரக்டர் ஸ்டீவன் பீல்பர்க், ராணி ஒப்ரா, வின்பிரே, இங்கிலாந்து முன்னாள் பரதமர் ஜான் மேஜர் உள்ளிட்ட 500 முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலா னவர்கள் கலந்து கொண்டனர்.
அதிபர் ஒபாமா அழைக்கப்பட வில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்திருக்கலாம் என தெரிகிறது. எனவே, அவர் திருமணத்தில் கலந்து கொண்டாரா என்று தெரிய வில்லை.
திருமணத்தில் கிளிண்டனின் தம்பி ரோஜர் கிளிண்டன் கலந்து கொண்டார். மேலும், செல்சியா மற்றும் மார்க் மெஷ்வின்ஸ்கியின் நண்பர்கள் மற்றும் கல்லுரி தோழர்கள், தோழிகள் பங்கேற்றனர்.
முன்னதாக கிளிண்டனும், அவரது மனைவியும் சேர்ந்து விருந்து அளித்தனர். இதற்கிடையே மணமகன் மெஷ்வின்ஸ்கியின் குடும்பத்தினருக்கு கிளிண்டன் இ-மெயிலில் ஒரு வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். அதில், மார்க்மெஷ் வின்ஸ்கியை தங்கள் குடும்பத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.
தனது திருமணம் குறித்து செல்சியா கூறும் போது, தனது வாழ்க்கையில் இது ஒரு அழகான தருணம் என்று தெரிவித்தார்.
முன்னாள் அதிபரின் மகள் திருமணம் என்பதால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டி ருந்தது. அங்குள்ள ரோடுகள் மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. எஸ்டேட் பகுதியில் வானில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
விருந்து அமர்க்களமாக நடந்தது. திருமண விழாவுக்கு ரூ.22 கோடி வரை செலவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக