மிட்செல் ஹெய்ஸ்மான் என்ற இந்த நபரால் அனுப்பி வைக்கப்பட்ட தற்கொலைக் குறிப்பை ஆராய்ந்த பொலிஸார், அதனை தயாரிக்க 5 வருட காலம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளனர்.
அக்குறிப்பில் தத்துவ ரீதியான பரிசோதனையின் ஒரு அங்கமாகவே தனது வாழ்வை முடித்துக் கொள்வதாக மிட்செல் குறிப்பிட்டிருந்தார்.
““வாழ்க்கை அர்த்தமற்றது. இவ்வாறு வாழ்க்கை அர்த்தமற்றதாக இருக்கையில், மாற்றீடுகளை தெரிவு செய்வது அடிப்படையற்றது. அனைத்து தெரிவுகளும் சமனானது. அதனால் வாழ்வையோ சாவையோ தெரிவு செய்வதற்கு எதுவித அடிப்படை வேறுபாடும் இல்லை'' என மிட்செல் தெ ரிவித்திருந்தார்.
நியூஜெர்ஸியை சேர்ந்த இவர், கல்லூரியில் தத்துவவியல் துறையில் கல்வி கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக