புதன், 29 செப்டம்பர், 2010

சாண்ட்விச் தயாரிக்க வாங்கிய பாணில் எலி !!!! (படங்கள் இணைப்பு)

தனது பிள்ளைகளுக்கு “சான்ட்விச்' உணவு தயாரிப்பதற்காக வாங்கிய பாணில் இறந்த எலி யொன்று இருப்பதை கண்டு நபரொருவர் அதிர்ச்சியடைந்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

ஒக்ஸ்போர்ட்ஷியரிலுள்ள கிட்லிங்டன் எனும் இடத்தைச் சேர்ந்த ஸ்டீபன் போர்ஸ் (41 வயது) மேற்படி நபர், பாணிலிருந்து சில துண்டுகளை ஏற்கனவே வெட்டி “சான்ட்விச்' தயாரித்து பிள்ளைகளுக்கு வழங்கியிருந்தார்.

இது தொடர்பில் ஸ்டீபன் போர்ஸ் விபரிக்கையில், ஆரம்பத்தில் பாணை வெட்டியபோது பாண் துண்டின் ஓரத்தில் நன்றாக கருகிய நிலையிலிருந்த எலியை தாம் எலியென்றே கருதவில்லை எனவும் அதனை தொட்டுப் பார்த்தபோது, அதில் முடி போன்று ஏதோ இருப்பதை உணர்ந்து சந்தேகத்தில் உற்றுப் பார்த்த போதே அது எலி என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்தார். ““பாணிலிருந்த எலியின் வால் பகுதி காணாமல் போயிருந்தது. அதனை நாம் ஏற்கனவே “சான்ட்விச்' செய்து உண்டுவிட்டோமோ என அச்சமாகவுள்ளது'' என்று அவர் கூறினார்.

எனினும் இந்த பாண் துண்டுகளை உண்ட எவரும் சுகவீனமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேற்படி பாணைத் தயாரித்து வழங்கிய பிறிமியர் பூட் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்நிறுவனத்துக்கு 16,821 ஸ்ரேலிங் பவுணை தண்டப் பணமாக செலுத்த உத்தரவிட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல