புதன், 29 செப்டம்பர், 2010

அவருடைய மகனுக்கு நான் தான் அப்பா என்று நினைக்கிறேன் !!!!

மறைந்த பொப் இசைப் பாடகர் மைக்கேல் ஜக்ஸனுக்காக தான் விந்தணுக்களைத் தானம் செய்ததாகவும் அவரது இளைய மகனான பிளாங்கட்டுக்கு தானே தந்தையாக இருக்கலாம் என நம்புவதாகவும் மைக்கேல் ஜக்ஸனின் முன்னாள் பிரித்தானிய மெய்க்காவலரான மட் பிடெஸ் திங்கட்கிழமை உரிமை கோரியுள்ளார்.

2001 ஆம் ஆண்டில் போர்க் கலைகளில் நிபுணராக விளங்கும் மட் பிடெஸை (29 வயது) அணுகிய மைக்கல் ஜக்ஸன், தனக்கு ஆரோக்கியமான வீரமான குழந்தை யொன்று வேண்டுமெனவும் அதற்காக விந்தணுக்களை தானமாக வழங்கி உதவுமாறும் கோயுள்ளார்.

இந்நிலையில் விந்தணு தானத்துக்காக தனக்கு 500,000 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பணத்தை மைக்கேல் ஜக்ஸன் வழங்கியதாக மட் பிடெஸ் தெரிவித்தார்.

மேற்படி விந்தணுக்களை தானம் செய்ததற்கு அடுத்த ஆண்டில் பிளாங்கட் பிறந்ததாக கூறிய மட் பிடெஸ், பிளாங்கட் (தற் போது 8 வயது) வளர்ந்து வருகையில் அச்சிறுவனுக்கு தன்னையொத்த பல இயல்புகள் காணப்படுவதை அவதானித்ததாக தெரிவித்தார்.

பிளாங்கட்டை தற்போது பராமரித்து வரும் மைக்கேல் ஜக்ஸனின் தாயாரான கத்தரின் ஜக்ஸன் இறக்கும் பட்சத்தில், அச்சிறு வனின் பராமரிப்பை தான் பொறுப்பேற்கும் வகையில் தானே அவனுக்கு தந்தையென நிரூபிக்க மரபணு பசோதனையொன்று நடத்தப்படுவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

ஏற்கனவே பிளாங்கட்டிற்கு தானே தந்தையென “ஒலிவர்' திரைப்படப் புகழ் நடிகரான மார்க் லெஸ்டர் உரிமை கோயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“மைக்கல் ஜக்ஸன் உயிருடன் இருந்தபோது பிளாங்கட் யாருடைய மகன் என ஒரு போதும் தன்னிடம் தெரிவிக்கவில்லை என்பதை ஒப்புக் கொண்ட மட் பிடெஸ், ““எனக்கு பிளாங்கட்டின் பேரிலுள்ள சொத்துக்களோ அன்றி பணமோ தேவையில்லை. எனது மகனாக பிளாங்கட் இருக்கும் பட்சத்தில், அவனை என்னிடம் ஒப்படைத்தால் போதுமானது'' என்று தெரிவித்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல