வெள்ளி, 10 செப்டம்பர், 2010

99 வயது மாது 20 வயது இளைஞனால் பாலியல் துஷ்பிரயோகம்

சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞனால் 99 வயது வயோதிப மாது ஒருவர் பாலியல் துஷ் பிரயோகத்துக்கு உட்படுத்தப் பட்ட சம்பவம் அவுஸ்திரேலிய ஒர்மன்ட் (Ormond) நகரில் இடம்பெற்றுள்ளது.

கோர்னாங் வீதியிலுள்ள (Koornang Road) வீட்டில் தன்னந்தனியே இந்த வயோதிபமாது வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவதினம் காலை வீட்டுக் கதவைத் தட்டிய இளைஞன், கதவு திறந்ததும் வயோதிபமாதை தள்ளியபடி உள்ளே நுழைந்துள்ளான்.

அதனையடுத்து மேற்படி இளைஞன் சுமார் அரை மணி நேரமாக உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் குறிப்பிட்ட வயோதிப மாதுவை துஷ்பிரயோகம் செய்துள்ளான்.

பேரப்பிள்ளைகளையும் பூட்டப் பிள்ளைகளையும் கண்டு தள்ளாடும் வயதில் உள்ள பெண் ஒருவர் இளைஞன் ஒருவனால் மிக மோசமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பது தம்மை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக பாலியல் குற்றச் செயல்கள் தொடர்பான புலன் விசாரணைகளுக்கு பொறுப்பான கிளென் டேவிஸ் (Glenn Davies) தெரிவித்தார்.

வயோதிப மாதை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மேற்படி இளைஞன் அவரின் முகம், கால்களில் கூரிய பொருளால் வெட்டியதுடன் அவரது தலையை பொருளொன்றால் தாக்கி காயப் படுத்தியுள்ளான்.

தீவிரமாக பாதிப்புக்குள்ளாகிய நிலையில் காணப்பட்ட இந்த வயோதிப மாது, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேற்படி அந்த இளைஞனை பொலிஸார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல