வெள்ளி, 10 செப்டம்பர், 2010

நாய்க்கடியால் 200 தையல் போட வேண்டிய நிலை (படங்கள் இணைப்பு)

இங்கிலாந்தின் Gloucester பகுதியில் உள்ள தன் பாட்டி வீட்டிற்கு சென்ற ஜோசுவா (Joshua) 2 வயது சிறுவனை பாட்டி வீட்டில் உள்ள collie வகையைச் சேர்ந்த நாய் கடித்துக் குதறியுள்ளது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு அவசர அறுவைசிகிச்சை நடத்தப்பட்டது.

முகத்தில் நாய் கடித்துக் குதறியுள்ளதால் முகத்தில் மட்டும் 200 தையல்கள் போட வேண்டிய நிலை உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று அந்த சிறுவனுக்கு மூன்றாவது அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. கழுத்து , தாடை , வாயின் உட்பகுதி, வெளிப்பகுதி மட்டுமல்லாது ரத்த நாளங்களும் இதனால் அந்த சிறுவனுக்கு பாதிப்பிற்குள்ளாகியுள்ளன.

அழகான தங்கள் மகனின் முகத்தைப் பார்த்து பெற்றோர்கள் கதறி அழுகின்றனர். எந்த வகையான நாயாக இருந்தாலும் சிறுவர்களை நாய்களின் அருகே விடும் போது பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் சிறுவனின் தாய்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல