வெள்ளி, 3 செப்டம்பர், 2010

நீங்கள் அடிக்கடி முரண்படுபவரா?

முரண்பாடு என்பது எல்லோருக்கும் பொதுவானது. இம்முரண்பாடுகள் எல்லா நேரங்களிலும் ஏற்படுகின்றன.

வீடுகளாக இருக்கட்டும் அல்லது பாடசாலையாக இருக்கட்டும் அல்லது நிர்வாகங்களாக இருக்கட்டும் அல்லது தொழில் செய்யும் இடங்களாக இருக்கட்டும்

ஏன் நாட்டின் நிர்வாகத்திலாக இருக்கட்டும் இவ்வனைத்திலும் ஏதோ ஒரு வகையில் முரண்பாடுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

முரண்பாடுகள் கட்டாயமாக தீமையானது என்பதல்ல. மாற்றுக் கருத்துக்களில் இருந்தே முரண்பாடுகள் தோன்றுகின்றன.

இரு நபர்கள் ஒரு விடயத்தை இருகோணங்களில் பார்ப்பார்களானால்

நிச்சயமாக அங்கு முரண்பாடு ஏற்படத் துவங்கிவிடும். இவ்வுடன்பாடின்மை சாதாரணமானவையே. மக்களின் மத்தியில் இருக்கின்ற வித்தியாசமான கலாசார பின்னணிகள், சூழல் காரணிகள், மக்களின் வேறுபட்ட அபிலாஷைகள், அரசியல் சமயக் காரணிகள், மற்றும் மாறுபட்ட தொடர்பாடல் முறைகள் இம் முரண்பாடுகளிடையே செல்வாக்குச் செலுத்துகின்றன.

உண்மையில் முரண்பாடானது அபிப்பிராயங்கள்,கருத்துக்கள், சிந்தனைகள் வேறுபடுவதனாலேயே எழுகின்றது. இம்முரண்பாடுகளை சிலர் நேர் மறையாக நோக்குகின்றனர். மற்றும் சிலர் எதிர்மறையாகவே நோக்குகின்றனர். மற்றுமொரு பகுதியினர் முரண்பாட்டை போட்டியாகவும் சவாலாகவும் அல்லது மாற்றமானதொன்றாகவும் நோக்குகின்றனர்.

முரண்பாடு என்பது சம்பந்தப்பட்ட மக்களின் போக்குகளையும் நடத்தைகளையும் பொறுத்து வேறுபடுகின்றது. அது உடன்பாடானதாக அல்லது எதிர்மறையானதாக மாற்றப்படுவதென்பது அம்முரண்பாட்டுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பதிலேயே தங்கியுள்ளது. நாம் அன்றாடம் சந்திக்கின்ற முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பதற்கு அது சம்பந்தமான மக்களின் போக்குகளை அல்லது நடத்தையை அவதானிப்பது மாத்திரம் போதாது. அதற்கு அப்பால் சென்று அம்முரண்பாடுகள் ஏற்படுவதற்கான காரணங்களையும் அதற்குச் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தரப்பினரதும் நோக்கங்களையும் அவதானிக்க வேண்டும்.

முரண்பாடுகளைக் குறைப்பதற்கு அல்லது அதற்குத் தீர்வு காண்பதற்கு தொடர்பாடல் இன்றியமையாததாகும்.

மேலும் அவ்வாறான முரண்பாடுகளை தீர்க்க பரஸ்பர புரிந்துணர்வு இன்றியமையாதது.

முரண்பாடுகள் ஏற்படுமிடத்து முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு பல்வேறு வகையான உத்திகள் கையாளப்படுகின்றன.

~ முரண்பாடுகள் ஏற்படாது தவிர்த்தல்.
~ முரண்பாடுகளில் இருந்து விடுபட்டு உடன்பாட்டுக்கு வருதல்.
~ முரண்பாடுகள் ஏற்படும் வாய்ப்புக்கள் இருந்தால் முரண்பாட்டுக்கு உரியவருக்கு இடமளித்து வாய்ப்பை வழங்குதல்.
~ முரண்பாடுகள் ஏற்படுவதனைத் தவிர்ப்பதற்கு கூட்டுச் செயற்பாட்டுக்கு முன்வருதல்.

நாங்கள் ஒவ்வொரு பிணக்குகளைக் கையாண்டு தீர்வுகாண்பதற்கு பல்வேறு வகையான வழிமுறைகளைக் கையாளுகின்றோம். ஒரு முரண்பாட்டுக்கு அல்லது பிணக்குக்கு தீர்வு காண்பதற்கான சிறந்த வழி அம்முரண்பாடு அல்லது பிணக்கு எவ்வகையானது என்பதிலேயே தங்கியுள்ளது. அநேகமான முரண்பாடுகள் தப்பபிப்பிரயாயத்தின் காரணமாகவே ஏற்படுகின்றன.

நாங்கள் வாழக்கூடிய சூழலில் முரண்பாடுகள் ஏற்படுவதென்பது தவிர்க்க முடியாதவொன்று. இத்தகைய சந்தர்ப்பத்தில் அதிகமான விட்டுக்கொடுப்புக்களும், பரஸ்பரப் புரிந்துணர்வும், உடன்பாடுகளும் அவசியப்படுகின்றன. மேலும் முரண்பாடான நபர்களுக்கிடையேயோ அல்லது குழுக்களுக்கிடையேயோ முரண்பாட்டுக்கான தீர்வைக் காணமுயலும் போது இருதரப்பினரும் திருப்தியடையக் கூடியதும் வெற்றி பெறக் கூடியதுமான வழிமுறையொன்றை தேடிப்பெற்றுக் கொள்வதே முக்கியமானதாகும். அதாவது நாம் ஏனையோருடன் மேற்கொள்கின்ற பரஸ்பர சந்திப்புக்களின் போதும் தப்பபிப்பிராயம் குறித்து அறிந்து கொள்வதன் மூலம் பல முரண்பாடுகளில் இருந்து தவிர்ந்து கொள்ள முடியும். அத்தோடு இயன்றளவு முரண்பாடுகளைக் குறைக்க வேண்டுமானால் நாம் ஒவ்வொருவரும் வாழும் சூழலுக்கேற்ப இயைபாக்கம் அடைவது இன்றியமையாததாகும்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல