வெள்ளி, 3 செப்டம்பர், 2010

வெற்றிக்கு வழி!

போராட்டம் நிறைந்த உலகில் மக்கள் பல்வேறுபட்ட சவால்களுக்கு முகங் கொடுக்கின்றனர். குறிப்பாக நவீன உலகில் மிக முக்கிய சவாலாகக் காணப்படுவது, தோல்வியை எதிர்கொள்ள விரும்பாமையே. பலர் தோல்வியைக் கண்டதும் விரண்டோடுகின்றனர். இத் தோல்வி மனப்பாங்கானது அனைவரினதும் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க அளவு பாதி ப்பை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகவே மாறி யிருக்கின்றது.

நாம் வெற்றி தோல்வியென்ற பரந்த விடயத்தை ஆராய்வதற்கு முன்பு எது வெற்றி? எது தோல்வி? என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். வெற்றி தோல்வி என்பதன் பொதுவான கருத்து, நாம் நினைத்ததை அடைந்தால் வெற்றி, அடையாவிட்டால் தோல்வி என்பதே. இதனை உளவியல் ரீதியாக நோக்கின் நமக்குப் பிடி த்தது வெற்றி, நமக்கு பிடிக்காதது தோல்வி என்றும் பொருள் கொள்ளலாம்.

வாழ்க்கையில் வெற்றி தோல்வி ஏற்ப டுவதென்பது சாதாரண விடயம். ஆனால் தோல்வியைக் கண்டதும் நாம் சலித்து நம்பிக்கையற்றவர்களாக மாறி விரக் தியடைந்து விடுகிறோம். குறிப்பாக உலகில் சாதனை படைத்த பலர் தோல்விகளைச் சந்தித்ததன் பிறகுதான் வெற்றியைக் கண்டார்கள். அத்தகைய வெற்றியாளர்கள் தோல்விகளைக் கண்டு பின்வாங்கியிருந்தால் இன்று சாதனையாளர்களாக மாறியிருக்கமாட்டார்கள்.

பொதுவாக மனிதர்கள் எவருமே எந்தவொரு விடயத்திலும் தோல் வியடைய விரும்புவதில்லை. அது தனிமனித வாழ்க்கையாக இருக்கட்டும், குடும்ப வாழ்க்கையாக இருக்கட்டும். அரசியல் நிலைமைகளாக இருக்கட்டும் எல்லா இடங்களிலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறுவதற்கும் அனைவரினதும் நன்மதிப்பைப் பெறுவதற்கும் உயரிய அந்தஸ்தைப் பெறுவதற்கும் ஏனையோரைவிட முன்னோடிகளாக வருவதற்குமே விரும்புகின்றனர்.

இந் நிலையில் நாம் வாழும் சூழலை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய புரிந்துணர்வானது எமது வாழ்க்கைக்கு ஆறுதலையும் உத் வேகத்தையும் நம்பிக்கையையும் ஏற் படுத்தும். குறிப்பாக பிறப்புக்குப் பிறகு இறப்பு வருவது போல இன்பத்திற்குப் பிறகு துன்பம் வருவது போல மேடு இருந்தால் பள்ளம் இருப்பது போல வாழ்க்கையில் வெற்றி,தோல்வி என்பன மாறி மாறி வருவது இயல்பான ஒரு விடயமே.

இதனை நடைமுறை வாழ்க்கையிலும் நம்மால் கண்டுகொள்ள முடிகிறது.

உதாரணமாக

- பரீட்சையில் சித்தியடையாவிட்டால்
- நேர்முகப் பரிட்சையில் தேறாவிட்டால்
- நாம் தேடும் தொழில் கிடைக்கா விட்டால்
- பதவி உயர்வு கிடைக்காவிட்டால்
- காதல் தோல்வி ஏற்பட்டதென்றால்
- சம்பள உயர்வு கிடைக்காவிட்டால்
என மேற்சொன்ன விடயங்களில் வெற்றி கிடைக்காவிட்டால், "இது எனது தலைவிதி, இதனை யாராலும் மாற்ற முடியாது. பலமுறை முயற்சி செய்து விட்டேன். ஆனாலும் தொடர்ந்தும் தோல்வியே வருகிறது" என சிந்தித்து நம்மை நாமே தோல்வி மனப்பான்மைக்குள் தள்ளிவிடுகிறோம்.

நாம் சிறுவராக இருந்ததிலிருந்து பல விடயங்களை சாதித்திருக்கின்றோம். பல முறை வெற்றி அடைந்துள்ளோம். ஆனால் ஒரு சில விடயங்களில் வெற்றிபெற முடியவில்லை என்ற காரணத்தினால் நான் ஒரு மிகப்பெரிய தோல்வியாளன் என்று நாமே முத்திரை குத்தி நமது வாழ்க்கையை வரையறுத்துக் கொள்கிறோம். நவீன உளவியலாளர்கள் குறிப்பிடுவது போல `வெற்றி என்பது உன் னை உலகிற்கு அறிமுகம் செய்யும். ஆனால் தோல்வி என்பது உன்னை உனக்கே அறி முகம் செய்யும்'. இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல் தோல்வியை ஒரு எதிரியாகவே நோக்குகின்றோம்.

ஒரு செயலில் வெற்றிபெற வேண்டு மானால் அதற்குப் பல பயிற்சிகளும் முயற் சிகளும் தேவை. இதனை நடைமுறை வாழ் க்கையில் கண்டு கொள்ள முடியும். ஒரு குழந்தை நடப்பதற்கு ஆயத்தமாகும் பொழுது பலமுறை விழுந்து பல தடைகளைத் தாண்டியே நடக்கக் கற்றுக் கொள்கின்றது. அக்குழந்தை எந்தனை தடைவைகள் விழுந்தாலும் அதனது இறுதி இலக்கை அடைந்தே தீருகின்றது. உளவியலாளர்களின் கூற்றுப்படி வாழ்க்கையின் வெற்றிக்குத் தேவையான 95 வீதத்துக்கு மேற்பட்ட பண்புகளை ஒரு குழந்தை 6 வயதுக்குள்ளே வளர்த்துக் கொள்கின்றது.

நாம் அனைவரும் வெற்றியை நோக் கியே பயணிக்கின்றோம். அவ்வாறு சென்றாலும் கூட சில சந்தர்ப்பங்களில் தோல்வியடைந்து விடுகிறோம். நாம் அடையப் போவது வெற்றியா அல்லது தோல்வியா என்பது நமது திட்டமிடலிலும் நிர்ணயித்துக் கொண்ட இலக்கிலுமே தங்கி யுள்ளது. மேலும் ஒருவருடைய அறிவுக் கூர்மையும் கடின உழைப்பும் மாத்திரம் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில்லை.

ஒருவருடைய வெற்றியைத் தீர்மா னிப்பதற்கு சில குணாம்சங்கள் காண ப்படுவது போல தோல்வியைத் தீர்மா னிப்பதிலும் சில குணாம்சங்கள் செல் வாக்குச் செலுத்துகின்றன. ஆனால் அவ்வாறு தோல்வியைத் தீர்மானிக்கும் குணாம்சங்கள் பிறப்பின் முலமோ பரம்பரை அலகுகளின் மூலமோ ஏற் படுவதில்லை. அவை நாம் சூழலிலிருந்து கற்றுக் கொண்டவையே.

எனவேதான் தோல்வியின் குணா ம்சங்களைக் கிள்ளி எறிவதோடு வெற்றியின் குணாம்சங்களை வர வழைத்துக் கொள்ள வேண்டும்.

- பிறர்மீதான நம்பிக்கையை எற்படுத்திக் கொள்ளல்.
- பிறர்மீது அளவுக்கதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொள் ளாதிருத்தல்.
- எவ்விடயத்திலும் பேராசையை ஏற் படுத்திக் கொள்ளாதிருத்தல்.
- பிறர்மீது தப்பெண்ணங் கொள் ளாதிருத்தல்.
- பிறர்மீது பொறாமையை ஏற் படுத்திக் கொள்ளாதிருத்தல்.
- எவ்விடயத்திலும் நேர் சிந்தனையை வளர்த்துக் கொள்ளல்.
- மென்மையான போக்கை கடைப்பிடித்தல்.
- எவ்விடயத்திலும் ஒரு முயற்சியாளனாய் செயற்படுதல்.
வெற்றி தோல்வி என்பது நாம் நினைப்பது போன்று ஒருவர் வாழ்கின்ற சூழலை மாத்திரம் வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை.

நவீன உளவியலாளர்கள் குறிப்பிடுவது போல குழந்தை கருவில் இருக்கும் போது சூழலில் ஏற்படுகின்ற மாற்றங் களுக்கேற்றவாறு இசைவாக்கமடைகிறது. குறிப்பாக அக் குழந்தையின் தாய் தோல்வி மனப்பாங்குடையவராகவும் எதிர்மறை மனப்பாங்குடையவராகவும் இருந்தால் பெரும்பாலும் அக்குழந்தை தாயின் இயல் புகளை ஒத்ததாகவே காணப்படும். தாயின் கருவறையில் இருக்கும்பொழுதே பெற் றோரின் நடத்தைகள், எண்ணங்கள் போன்றவை வெற்றி தோல்வி மனப்பாங்கில் தாங்கம் செலுத்துகின்றன.

ஆகவே ஒருவர் பிறக்கும் முன்பே அவ ருடைய வெற்றி-தோல்வி மனப்பாங்கை மாற்றியமைக்கலாம். எவ்வாறெனில் குழந்தைகளின் பெற்றோர் நேர் மனப்பாங்கு (Positive Thinking) உடை யவர்களாக இருந்தால் பிறக்கும் குழந்தையும் நேர் மனப்பாங்கு உடையதாக இருக்கும். இவ்வாறான சூழலில் வளரும் குழந்தை தோல்வியையும் வெற்றியாக மாற்றும்.

-முன்ஸிப் பரீட்-

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல