வெள்ளி, 3 செப்டம்பர், 2010

என்ன மதம் எனக் கேட்டுவிட்டு கத்தியால் குத்திய அமெரிக்கர்

Michael Enright, 21

மதம் என்ன என்பதைக் கேட்டறிந்துவிட்டு முஸ்லிம் என்பது உறுதியானவுடன் வாகன ஓட்டுனர் ஒருவரை கத்தியால் குத்திக் காயத்தை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
Ahmed H. Sharif

பங்களாதேஷைச் சார்ந்த அஹ்மத் ஷெரீப் (Ahmed H. Sharif) என்பவர்தான் கத்திக் குத்துக்கு இலக்கான வாகன ஓட்டுன ராவார்.

இச்சம்பவம் நடைபெற்றவுடனேயே மேயர் மைக்கேல் ப்ளும்பெர்க் (Michael Bloomberg), ஷெரீபையும் அவருடைய குடும்பத்தினரையு அழைத்து நலம் விசாரித்துள்ளார். எல்லா உதவியையும் வாக்களித்த மேயர், ஷெரீபிற்கும் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இத்தகைய நிகழ்வுகள் தாக்குதல்களை அதிகரிக்கவே உதவும் என வாகன ஓட்டுனர்கள் அமைப்பின் தலைவர் பைரவி தேசாய் தெரிவித்து ள்ளார். முஸ்லிம்களை அச்சுறுத்தவே இத்தாக்குதலை நடத்தியவர்கள் முயற்சிக்கிறார்கள் எனவும் இதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமெரிக்க இஸ்லாமிய கலாசார நிலையத்தின் இமாம் ஷம்ஸி அலி தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கி ழமையன்று ஷெரீபின் காரில் ஏறிய மைக்கேல் என்ரைட் (Michael Enright, 21) என்பவர் ஷெரீபிடம் "நீ முஸ்லிமா? நோன்பாளியா?" எனக் கேட்டுவிட்டு கத்தியால் குத்தியுள்ளார். இவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Michael Bloomberg and Ahmed H. Sharif

2001 செப்டம்பர் 11 தாக்குதலில் தகர்ந்துபோன உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இடத்தில் மஸ்ஜித் ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணிகள் நடந்து வருகையில் அமெரிக்காவில் முஸ்லிம் விரோத மனப்பான்மை அதிகரித்துள்ளது. ஆனால், நியூயோர்க் மேயர், ஆளுனர், ஜனாதிபதி ஒபாமா ஆகியோர் மஸ்ஜித் நிர்மாணத்திற்கு பூரண ஆதரவை தெரிவித்துள்ளனர்.

எட்டு இலட்சம் முஸ்லிம்கள் நியூயோர்க்கில் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல