திங்கள், 27 செப்டம்பர், 2010

இசை அமைப்பாளர் சந்திரபோஸ் காலமானார்

காக்கி சட்டை போட்ட மச்சான்..., சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா..., பச்சபுள்ள அழுதுச்சின்னா..., டில்லிக்கு ராசான்னாலும் பாட்டி சொல்லை தட்டாதே..., காளை காளை முரட்டுக்காளை... பூஞ்சிட்டுக் குருவிகளா புதுக்கோட்டை கிழவிகளா... உள்ளிட்ட ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்திரபோஸ் காலமானார்.

அவருக்கு வயது 55. நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று (28ம்தேதி) இறந்தார்.

தமிழ் சினிமாவில் 350க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் சந்திரபோஸ். இதில் ஏவி.எம்.மின் தயாரிப்பில் வந்த 12 படங்களும் அடங்கும். 1977ல் தொடங்கிய இவரது இசையுலக வாழ்க்கை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்தது. 1978ம் ஆண்டு வெளியான “மச்சானைப் பார்த்தீங்களா” படத்தில் இடம்பெற்ற “மாம்பூவே சிறு மைனாவே” பாடல் சந்திரபோஸ்க்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

கே.பாலாஜியின் “விடுதலை” படத்தில் சந்திரபோஸின் பரபரப்பாக பேசப்பட்டது. குறிப்பாக “நீலக்குயில்கள் ரெண்டு” பாடல் பெ‌ரி‌ய ஹி‌ட்‌. இசை‌ உலகில் சாதித்ததைப் போலவே திரையுலகில் நடிப்பிலும் கால்பதித்த சந்திரபோஸ் லிங்கம் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வைர ‌நெஞ்சம், மெகா சேனலில் ஒளிபரப்பான ஜனனம் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல