செவ்வாய், 21 செப்டம்பர், 2010

சுவீடனில் குடியேற்றத்திற்கு எதிரான கட்சி பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றியுள்ளது

ஜிம்மி அகெஸன்
அக்கட்சியானது 349 பாராளுமன்ற ஆசனங்களில் 20 ஆசனங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில் பிரதமர் பிரெட்றிக் ரெயின் பெல்ட்டின் ஆளுங் கட்சியானது 172 ஆச னங்களைப் பெற்றுள்ள போதும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான ஆசனங்களில் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது.

ஆளுங் கட்சியுடன் கூட்டிணைந்து அர சாங்கத்தை அமைப்பதற்கு ஜனநாயக கட்சி மறுப்புத் தெவித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் பிரெட்றிக் ரெயின் பெல்ட், கிறீன் கட்சியின் ஆதரவுடன் அரசாங்கத்தை அமைக்க எதிர்ப்பார்த்துள்ளதாக கூறினார்.
பிரதமர் பிரெட்றிக் ரெயின் பெல்ட்

சுவீடன் ஜனநாயக கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்கும் திட்டம் தமக்கில்லை என பிரதமர் வலியுறுத்தினார். ““இந்த நிச்சயமற்ற சூழ்நிலையை எவ் வாறு கையாளுவது என்பதில் நாம் தெளிவாக உள்ளோம். நாங்கள் சுவீடன் ஜனநாய கக் கட்சியுடன் கூட்டிணையவோ அன்றி அக்கட்சியிடம் தங்கியிருக்கவோ போவதில்லை'' என அவர் குறிப்பிட்டார்.

கிறீன் கட்சியின் இணைத்தலைவரான மயா வெட்டர்ஸ்ரன்ட் விபரிக்கையில், எதிர்க்கட்சி கூட்டமைப்பானது 157 ஆச னங்களை பெற்றுள்ளதாக கூறினார்.

சுவீடன் ஜனநாயக கட்சியின் தலைவர் ஜிம்மி அகெஸன் கூறுகையில், ““நாங்கள் கையாளுவதற்கு எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. தற்போது சூழ்நிலை சற்று நிச்சயமற்று உள்ளது'' என்று கூறினார்.

““ஜிம்மி அகெஸன் குடியேற்றங்கள் குறித்து அதிருப்தியை வெளியிட்டதன் மூலம் உள்நாட்டு வாக்காளர்களின் ஆதரவை பெற்றார். அந்நாட்டின் 9.4 மில்லியன் சனத் தொகையில் 14 சதவீதமானவர்கள் குடியேற்றவாசிகளாவர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல