செர்ரி ஆஸ்டன் அவரது தாயார் ஜெனட்டுடன்
மாணவ-மாணவிகளின் உடை விடயத்தில் கண்டிப்பான விதிமுறைகளை இந்த பாடசாலை பின்பற்றி வருகிறது.
மாணவிகள் அணியும் ஸ்கர்ட் முழங்கால் வரை இருக்க வேண்டும் என்பது இந்த பாடசாலையின் விதிமுறை. ஆனால் முழங்காலுக்கு மிகவும் மேலே இருக்கும் படியான குட்டைப்பாவாடையை அணிந்து வந்ததால் செர்ரி ஆஸ்டன் மிரட்டப்பட்டு பாடசாலையை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
செர்ரி ஆஸ்டன் வகுப்பில் பயிலும் பிற மாணவர்களின் பொதுவான உயரம் 5 அடி 3 அங்குலம். இவர் 5 அடி 10 அங்குல உயரத்தில் இருப்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த விளக்கங்களை ஏற்றுக் கொள்ள பாடசாலை நிர்வாகம் தயாராக இல்லை.
தேவைப்படும் அளவை விட இரண்டு அங்குலம் ஸ்கர்ட்டின் உயரம் குறைவாக இருப்பதாக கூறி 200 மாணவர்களுக்கு நடுவே பாடசாலையின் தலைமை ஆசிரியர் இவரை கண்டித்துள்ளார்.
பின்னர் வகுப்பிற்குச் சென்ற மாணவி தனியாக அழைக்கப்பட்டு விதிமுறைகளை பின்பற்றாததால் பாடசாலையை விட்டு வெளியேறுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக