செவ்வாய், 21 செப்டம்பர், 2010

ஃப்ளு தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஹார்ட் அட்டாக் வரும் அபாயம் குறைகிறதாம்

குளிர்காலங்களில் அதிகமாக பரவும் ஃப்ளு காய்ச்சலுக்கான தடுப்பூசியை போட்டுக் கொள்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு 25 விழுக்காடு குறையும் என்கிறது ஆராய்ச்சி.

இது போன்ற தடுப்பூசிகளை போட்டுக் கொள்பவர்களுக்கு பொதுவாகவே இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் பரவுவது குறைகிறது என்பதால் மார்படைப்பு விகிதமும் 25 விழுக்காடு குறைகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இதற்காக 40 வயதிற்கு மேற்பட்ட சுமார் 80,000 நோயாளிகளை ஆய்விற்குட்படுத்தியுள்ளனர். இந்த ஆய்வில் தடுப்பூசி போடப்பட்டவர்களில் 19 சதவீதம் பேருக்கு ஹார்ட் அட்டாக் வருவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் ஆண்டுதோறும் ஏழு மில்லியன் மக்கள் ஃப்ளுவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகப்படியானோர் ஓய்வூதியம் பெற்று வரும் வயதானவர்கள். எதிர்ப்பு சக்தி குறைவினால் இவர்களுக்கு பிறரைக் காட்டிலும் நோய்த்தொற்றுக்கள் உடனடியாக ஏற்படுகிறது.

அதனால் தடுப்பூசியும் போடப்படுகிறது. இந்த தடுப்பூசிகளை செப்டம்பர் , அக்டோபர், நவம்பரில் ( முதல் வாரம் ) போட்டுக் கொள்பவர்களுக்கு மார்படைப்பு அபாயம் 21 விழுக்காடு குறைவாகவும் டிசம்பர் , ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் போட்டுக் கொள்பவர்களுக்கு மார்படைப்பு அபாயம் 12 விழுக்காடு குறைவாக உள்ளதையும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல