செவ்வாய், 21 செப்டம்பர், 2010

யாழ்ப்பாணத்துப் பருப்புக்கறி

தேவையான பொருட்களும் செய்முறையும்

1. 100 கிராம் மைசூர்ப் பருப்பை எடுத்து, நன்றாகக் கல்லரித்துக் கழுவி, அதை ஒரு மண் சட்டியில் போட்டு சிறிதளவு தண்ணீர்விட்டு, அதனுடன் சிறிதளவு வெட்டிய சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து அவிய விடவும்.

2. பருப்பு நன்றாக அவிந்ததும் சிறிதளவு மஞ்சள்த் தூள் சேர்க்கவும். அதுவரையில் மண் சட்டிக்குள் அகப்பையை/கரண்டியைப் போடக்கூடாது.

3. அதன் பின்னர் கெட்டியான (முதல்) தேங்காய்ப்பால், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க விடவும்.

4. இறுதியாக இடித்த நற்சீரகம் ,மிளகு, உள்ளிக் கலவையை இடவும்.

5. இன்னொரு தாச்சியை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, வெட்டிய சிறிய வெங்காயம், கருவேப்பிலை, செத்தல் மிளகாய், பெருஞ்சீரகம், கடுகு ஆகியவற்றைப் போட்டுத் தாழித்து எடுக்கவும்.

6. கொதித்த பருப்புச் சட்டிக்குள் தாழிதத்தைப் போட்டு பருப்புக்கறியை இறக்கிப் பரிமாறுங்கள்.Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல