வியாழன், 14 அக்டோபர், 2010

தந்தையை கட்டிப் போட்டு விட்டு சிறுமி மீது பாலியல் வல்லுறவு

மதுரங்குளியில் இரவு நேரத்தில் வீடொன்றினுள் அத்துமீறிப் பிரவேசித்துள்ள இருவர் வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த தந்தையை கட்டிப் போட்டுவிட்டு அவ்வீட்டிலிருந்த 15 வயது பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர். இக் குற்றச் செயலுடன் தொடர்புடைய இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கையினை மேற் கொண்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இருவரும் 40 தல் 45 வயதுக்குட்பட்ட திருமணமானவர்கள் என்றும் குறித்த சிறுமியின் தந்தைமீது இருந்த குரோதத்திற்கு பழி தீர்க்கும் வகையிலே இக்குற்றத்தைச் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

பாலியல் வல்லுறவுக்கு உட்பட்ட சிறுமியும் அச்சிறுமியின் தந்தையும் தனியாக வாழ்ந்துள்ளனர்.
சம்பவ தினம் இரவு வேளையில் அவர்களது வீட்டுக்குள் அத்துமீறிப் பிரவேசித்துள்ள இரு சந்தேக நபர்களும் சிறுமியின் தந்தையை அவர் உறங்கிக் கொண்டிருந்த கட்டிலிலேயே வைத்து கயிற்றினால் கட்டிப் போட்டு விட்டு சிறுமியைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வெளியில் சென்று இரு வரும் இக் குற்றத்தைப் புரிந்துள்ளதாகத் தெவிக்கப்படுகின்றது.

சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல