வியாழன், 14 அக்டோபர், 2010

இராட்சத உருவம் (படங்கள் இணைப்பு)

3 வயதில் 140 இறாத்தல் நிறையைக் கொண்டுள்ள சீன சிறுவன் ஒருவன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகின்றான்.
ஸியாவோ ஹவோ என்ற இந்த சிறுவன் தனது வயதையொத்த ஏனைய சிறுவர்களுடன் ஒப்பிடுகையில் 5 மடங்கு அதிகமான நிறையைக் கொண்டு விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

தென் சீனாவில் குவாங் ஸொயு மாகாணத்தில் வசிக்கும் இந்த சிறுவன் தொடர்பில் அவனது தாயாரான ஸியாவோ லின் விபரிக்கையில், ““ஸியாவோ ஹவோ தனது நிறையால் எதுவித பாதிப்புமின்றி இயல்பாக இருக்கின்றான். அவனுக்கு விளையாடுவது என்றால் மிகவும் விருப்பம்.

நான் அவனை நீச்சல் பயிற்சிக்கு அழைத்துச் சென்றபோது, இறப்பர் மிதவை வளையங்கள் அவனது அளவை விட சிறியனவாக இருந்தன. இதனால் அவனுக்கு பொருத்தமான மிதவை வளையங்களை தேட வேண்டியுள்ளது'' என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த சிறுவனது அளவு கடந்த நிறையானது அவனது ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கலாம் என மருத்துவர்கள் எச்சஎஇத்துள்ளனர்.

சிறுபிள்ளையாக இருந்தபோது
ஹோர்மோன் சுரப்பில் ஏற்பட்ட ஒழுங்கீனமே இந்த சிறுவனின் அளவு கடந்த நிறைக்கு காரணமென நம்பப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல