இரண்டு மாதங்களுக்கு முன்பு சான் ஜோசே சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கை செவ்வாய் கிழமை இரவு ஆரம்பித்தது. வியாழக் கிழமை காலை அது முடிவுக்கு வந்தது.
இந்த சுரங்கத் தொழிலாளர்களை சுரங்கத்துக்குள் கூட்டிச் சென்றவரான லூயிஸ் உர்சுவா கடைசியாக மீட்கப்பட்டார். இந்த தொழிலாளர்கள் வெளியுலகத் தொடர்பின்றி பூமிக்கடியில் இருந்த போது அவர்கள் சோர்ந்து விடாமல் இருக்க இவர் தைரியம் அளித்தார்.
ஒரு சில சுரங்கத் தொழிலாளர்களை விட மற்றவர்கள் நல்ல உடல் நிலையில் உள்ளனர். வெளியே வந்த சுரங்கத் தொழிலாளர்களை அவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க கட்டித் தழுவியும், முத்தமிட்டும் தமது மகிழ்சியை வெளிப்படுத்தினர்.
இடைவிடாது 24 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற இந்த மீட்பு நடவடிக்கை உலகம் முழுவதும் பல்வேறு தொலைக் காட்சி சேனல்களால் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட உலகத் தலைவர்கள் மீட்கப்பட்ட சுரங்கத் தொழிலாளிகளுக்கும், அவர்களை மீட்ட நிபுணர் குழுவினருக்கும் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளனர்.
BBC



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக