வியாழன், 14 அக்டோபர், 2010

அரேபியர்களின் அறிவீனம்

எகிப்து நாட்டுக்கு சுற்றுலாவாக வரும் சவுதி அரேபிய மற்றும் ஈராக்கிய ஆண்கள் அந்த நாட்டில் தங்கி இருக்கும் காலத்துக்கு எகிப்து நாட்டு பெண்களை அதுவும் 16 வயதுக்கு உட்பட்டவர்களை இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள். இந்த திருமணம் சவுதி அரேபிய ஆண்கள் எகிப்தில் தங்கி இருக்கும் கால கட்டம் வரை தான் நீடிக்கும். அதாவது ஒரு மாதம் தான் நீடிக்கும். அவர்கள் எகிப்தை விட்டு வெளியேறும் போது விவாகரத்து கொடுத்து விட்டு போய் விடுவார்கள். இந்த திருமணத்தின் போது பெண்ணை பெற்ற தந்தைக்கு இந்த வியாபாரத்துக்கு விலையாக 4 ஆயிரம் எகிப்திய பவுண்டு (அந்த நாட்டு ரூபாய்) கிடைக்கும்.

இந்த திருமணத்தை மிஸ்பார் (Misfar Marriages) என்று அரேபிய மொழியில் குறிப்பிடுகிறார்கள். இதற்கு சுற்றுலா திருமணம் என்று பொருள். இந்த மாதிரி திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் தாங்கள் ஒரு பொருள் மாதிரி நடத்தப்படுகிறோம் என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்று அந்த நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த மாதிரி திருமணம் மூலம் பிறக்கும் குழந்தைகளை வெளிநாட்டு ஆண்கள் அந்த நாட்டிலேயே அனாதைகளாக விட்டு விட்டு போய் விடுகிறார்கள். இப்படி அனாதையாக்கப் பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தற்போது 900 சிறுவர்கள் வீதிகளில் அனாதைகளாக இருக்கிறார்கள். இது அந்த நாட்டுக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல