ஆரம்பக் கல்விக்கு மேல் இவர் கல்வி பயிலாவிட்டாலும் போர் மோசா கூட்டுத்தாபனத்தின் தலைவராக மிகத் திறமையாகக் கடமையாற்றிய பெரும் செல்வந்தர் என போப்ஸ் சஞ்சிகை குறிப்பிட்டது. இந்தக் கூட்டுத் தாபனம் உலகிலேயே அதிக பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது, ஆனால் வாங்க் மிகவும் எளிய வாழ்க்கையிலேயே வாழ்ந்தார்.
அவர் போர் மோசா பிளாஸ்டிக் கூட்டுத்தாபன கட்டிடத்தின் மேல் மாடியைத் திறந்து அதை ஒரு மரக்கறி தோட்டமாக மாற்றினார். அவரது தாயார் இறந்த போது அவருக்காகச் சேமித்து வைக்கப்பட்ட உணவு முழுவதையும் தானே உட்கொண்டார்.
விருந்தாளிகளுக்கு கோப்பி கொடுத்து அவர்கள் அருந்திய பின்பு கிண்ணத்தில் எஞ்சி இருப்பதை (விருந்தாளிகள் சென்ற பின்பு) ஒன்றாகச் சேர்த்து ஒரு கிண்ணத்தில் வார்த்து குடிப்பாராம்.
சவர்க்காரத்தை உப யோகித்து முடித்தாலும் ஒரு சிறு குச்சியளவு கூட எஞ்ச விடமாட்டார். அவர் ஜிம்மிற்கு கொண்டு செல்லும் துவாயை 27 வருட மாக தொடர்ந்து உபயோகித்தார்.
தனிப்பட்ட ரீதியில் அவரைப் பத்திகையாளர்கள் செவ்வி காண்பதை அவர் எப்போதும் அனுமதித்ததில்லை. ஒருவர் மிகக் கடினமாக உழைக்கவேண்டும் ஆனால் தனிப்பட்ட அனுபவங்களைப் பிறருக்கு கூற வேண்டிய அவசியமில்லை என்பது அவரது கொள்கை. இந்த குழப்பமான காலத்தில் அவர் தனது நடத்தைக்கு விசுவாசமாக இருந்தார். மேலும் தனது பாரம்பரியத் தொழிற்சாலையுடன் கட்டுண்டு இருந்தார்,.
மிங்கி தொழில் நுட்ப நிறுவனம், சாங் குங் ஞாபகார்த்த வைத்தியசாலை மற்றும் சாங் குங் பல்கலைக்கழகம் ஆகிய வற்றின் தலைவராகக் கடமை யாற்றியுள்ளார். சீனா மற்றும் தாய்வான் நாடுகளுக்கிடையே இணைப்பை பலப்படுத்த அயராது உழைத்தார். இவருக்கு 2 மகன்களும் 8 மகள்களும் இருக் கின்றார்கள். இவரது மகள்மாரும் அரைக்கடத்தி உற்பத்தி மற்றும் சர்வதேச கம்பியூட்டர் உற்பத்தி நிறுவனத் தலைவர்களாக புகழடைந்தனர்.
வாங் அவர்கள் ஒக்டோபர் 15 2006 ஆம் ஆண்டு படுக்கையிலேயே 91வயதில் இறந்தார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக