செவ்வாய், 30 நவம்பர், 2010

அணுசக்தி விஞ்ஞானி குண்டுத்தாக்குதலில் பலி (படங்கள் இணைப்பு)

மஜீத் ஷஹ்ரியா
ஈரானில் இடம்பெற்ற இருவேறு குண்டுத் தாக்குதல்களில் அந்நாட்டு அணுசக்தி விஞ்ஞானியொருவர் பலியானதுடன் பிறிதொரு அணுசக்தி விஞ்ஞானி காயமடைந்துள்ளார். மேற்படி அணு சக்தி விஞ்ஞானிகள் பயணம் செய்த கார்களிலேயே குண்டு பொருத்தப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.

தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஷாஹித் பெஹெஷ்தி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானியான மஜீத் ஷஹ்ரியாயே இத் தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்கள் மேற்படி விஞ்ஞானிகளின் கார் ஜன்னல்களில் குண்டுகளை பொருத்திவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த விஞ்ஞானிகள் இருவரும் திங்கட்கிழமை காலை தமது பணிக்கு காரில் சென்று கொண்டிருந்த வேளையிலேயே குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

“இது ஒரு பயங்கரவாத நடவடிக்கை. இரு முக்கிய பல்கலைக்கழகப் பேராசியர்கள் தமது பணிக்காக சென்றுகொண்டிருந்த வேளை யூத தேச முகவர்களின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்கள்' என அந்நாட்டு அரசாங்க தொலைக்காட்சி அறிக்கையிட்டுள்ளது.

கலாநிதி ஷஹ்ரியாரி, ஷாஹித் பெஹெ ஷ்தி பல்கலைக்கழகத்தின் அணு சக்தி பொறியியல் திணைக்களத்தின் உறுப்பினர் ஆவர்.

இத்தாக்குதலில் அவரின் மனைவி காயமடைந்துள்ளார்.

பிறிதொரு தாக்குதலில் பரேடூன் அப் பாஸி என்ற விஞ்ஞானியும் அவரது மனைவியும் காயமடைந்துள்ளனர்.
மசூத் அலி மொஹமட்

இந்த வருட ஆரம்பத்தில் இடம்பெற்ற தாக்குதலொன்றில் பிறிதொரு அணு சக்தி விஞ்ஞானியான மசூத் அலி மொஹமட் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சனிக்கிழமை ஈரானானது தென் புஷிஹர் நகரிலுள்ள தனது முதலாவது அணு சக்தி நிலையத்தின் செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்தது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல