செவ்வாய், 30 நவம்பர், 2010

கட்டிடம் இடிந்து விழுந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம் பவம் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது.பழைய கட்டிடம் ஒன்றினை உடைத்துக் கொண்டிருந்தபோது அக் கட்டிடம் இடிந்து விழுந்ததினால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் பருத்தித்துறை சக்கோட்டையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான டானியன் தேவன் (வயது 33) என்ற இளம் குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.கட்டிட இடிபாடுகளுள்ளிருந்து மீட்கப்பட்ட இவரது சடலம் மரண விசாரணையின் பொருட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல