செவ்வாய், 30 நவம்பர், 2010

பிஸ்கட் உண்ட 14 வயது சிறுமிக்கு உள்ளங்கைகளில் சூடம் ஏற்றி கொடுமை

ஐந்து பிஸ்கட்டுக்களை வீட்டு உரிமையாளர் இல்லாத சமயம் உண்டமைக்கான தண்டனையாக 14 வயது சிறுமியின் உள்ளங்கைகளில் சூடம் ஏற்றி கொடுமை செய்த சம்பவம் ஒன்று மொறாஹேன பகுதியில் இடம் பெற்றுள்ளது.

வீட்டுமையாளர் வெளியே சென்ற சமயம் குறித்த 14 வயது சிறுமி 5 பிஸ்கட்டுக்களை உண்டதாகவும், இதற்கு தண்டனையாகவே வீட்டு உரிமையாளர் இந்த கொடுமையினை செய்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டை அடுத்து ஆடைத் தொழிற்சாலை உரிமையாளரான குறித்த வீட்டு உரிமையாளரும், மற்றொருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஆடைத் தொழிற்சாலை உரிமையாளரும் அவரது மனைவியும் விருந்துபசாரம் ஒன்றுக்காக வெளியில் சென்றிருந்த போதே மேற்படி சிறுமி பிஸ்கட்டுக்களை உண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவரது கைகளில் சூடம் ஏற்றி கொடூரம் விளைவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மொறாஹேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல