செவ்வாய், 30 நவம்பர், 2010

கிழிந்த சப்பாத்தை திரும்பத்திரும்ப தைத்து அணிந்த கோடீஸ்வரர்

லி கா சிங், ஹொங்கொங் நாட்டின் அதி பிரபல செல்வந்த வர்த்தகர். இவர் கிழக்கு ஆசியாவின் பெரும் பணக்காரர், உலகில் 14 ஆவது செல்வந்தர், பெப்ரவ 2010 மதிப்பீட்டின் படி 21.3 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்திற்கு அதிபதியாவார்.

ஜூலை 29, 1928 இல் பிறந்த லி கா சிங் அவர்கள் தற்போது ஹச்சிசன் வாம்போ வா கம்பனி மற்றும் சுவாங் கொங் ஹோல் டிங்ஸ் ஆகியவற்றின் தலைவராவார். இக் கம்பனி மூலம் உலகில் அதிக கன்டயினர் மற்றும் ஆரோக்கிய அழகு சாதனங்களை விநியோகிப்பவர். இவரே. ஆசியாவின் அதி சக்தி வாய்ந்த மனிதர் என இவரை அழைக்கின்றனர்.

இருப்பினும் இவர் மிகவம் எளிய சிக்கனமான வாழ்க்கை வாழ்ந்தார். தனது ஆடைகள், சப்பாத்துக்கள் வாங்குவதில் பெரும் சிக்கனத்தைக் கடைப்பிடித்தார். சப்பாத்துக்கள் கிழிந்தாலும் தைத்து தைத்து உபயோகிப்பார், அவடரிம் 5 புதிய சோடி சப்பாத்துக்களும் 10 ஜோடி பழைய சப்பாத்துக்களும் இருந்தன. கடந்த எட்டு அல்லது 10 வருடங்களாக ஒரே ஒரு சூட் ஆடையையே அவர் உபயோகித்தார்.

லிகா சிங் ஒவ்வொரு நாள் காலையிலும் குழிப்பந்தாட்டம் விளையாடுவார். அதன் பின் நீச்சல் தொடர்ந்து தனது கடினமான தொழிலைக் கவனிக்கச் செல்வார்.

தனது நீல சீருடையை அணிவதில் பிடி வாதமாய் இருப்பார். மிக விலை குறைந்த கைக்கடிகாரத்தையே அணிவார். தத்துவம், அரசியல், பொருளாதாரம், சீனக் கலாசாரம் மற்றும் புதிய தொழில் நுட்ப நூல்களைப் பெரிதும் ஆர்வமாய் வாசிப்பார்.

தனது 20% ஓய்வு நேரத்தை தர்ம ஸ்தாபனங்களுக்காக செலவு செய்வார். அமெரிக்கா, இங்கிலாந்து, ஹொங்கொங், சீனா முதலிய நாடுகளில் பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் கட்டுவதற்காக 500 மில்லியன் டொலர்கள் ஒதுக்கியுள்ளார்.
மேலும் ஏழைகளுக்கு உதவும் முகமாக தர்ம ஸ்தாபனங்களுக்கு தனது சக்தியையும், பணத்தையும் வழங்கப்போவதாக சூளுரைத்துள்ளார்.

லி கூசிங், அவரது வர்த்தக சக்தியின் மேன்மையால் சுப்பர்மான் என அழைக்கப்படும் அதே வேளை பெரும் ஜனோபகாரியாகவும் திகழ்கின்றார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல