செவ்வாய், 30 நவம்பர், 2010

சூனியத்தில் ஈடுபட்ட 72 வயது பெண்மணி உயிருடன் தீவைத்து படுகொலை

சூனியக்காரியாக செயற்பட்ட குற்றச்சாட்டில் 72 வயது பெண்மணி ஒருவர் 5 பேரைக் கொண்ட குழுவினரால் உயிருடன் தீவைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கானாவில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், மேற்படி படுகொலையுடன் தொடர்புடைய ஐவரும் கைது செய்யப் பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு மதபோதகரும் 3 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் 37 வயதுக்கும் 55 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர்.

மேற்படி ஐவரும் அமா ஹெமாஹ் என்ற இந்த பெண்ணை சூனியவேலைகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி அடித்து சித்திரவதை செய்து அவரின் மீது மண்ணெண் ணையை ஊற்றி தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர்.

கடும் தீக்காயங்களுக்கு ஆளாகிய அமா ஹெமாஹ் மறுநாள் உயிரிழந்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல