வியாழன், 30 டிசம்பர், 2010

24ஐ திருமணம் செய்யும் 84 வயது ‘ப்ளேபாய்’

அமெரிக்காவில் வெளியாகும் கிளுகிளு பத்திரிகை ப்ளேபாய். அதன் உரிமையாளர் ஹக் ஹெப்னர். வயது 84. அவரது லேட்டஸ்ட் காதலி கிறிஸ்டல் ஹாரிஸ். வயது 24. தன்னைவிட 60 வயது குறைந்த பெண்ணை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக டுவிட்டரில் ஹெப்னர் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்கள் முன்புதான் ஹெப்னர் தனது 2வது மனைவி கிம்பர்லி கன்ராட் என்பவரை விவாகரத்து செய்தார்.

மாடலான முதல் மனைவியையும் இவர் ஏற்கனவே விவாகரத்து செய்துவிட்டார். கிறிஸ்டலும் அவரும் கடந்த கிறிஸ்துமஸ் நாளில் மோதிரம் பரிசளித்து திருமணத்தை நிச்சயம் செய்தனர். இதுபற்றி டுவிட்டரில் ஹெப்னர், ‘கிறிஸ்துமஸ் நாளில் இருவரும் சினிமா பார்த்து ரசித்தோம். பிறகு, பரிசுகளை பரிமாறிக் கொண்டோம். கிறிஸ்டலுக்கு நான் மோதிரம் கொடுத்தேன். இருவருக்கும் இது மறக்க முடியாத கிறிஸ்துமஸ் கொண்டாட்டம். நான் மோதிரம் அணிவித்தபோது கிறிஸ்டல் ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல