வியாழன், 30 டிசம்பர், 2010

தென் ஆபிரிக்க முன்னாள் முதல் பெண்மணி வின்னி மண்டேலாவின் மாபெரும் இசை நிகழ்ச்சி

தென் ஆபிரிக்க ன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மதிகிஸெலா மண்டேலா, பிறிடோரியா நகரில் தனது முதலாவது மாபெரும் இசை நிகழ்ச்சியை எதிர்வரும் வருடம் நடத்தவுள்ளதாக அறிவிப்புச் செய்துள்ளார்.

மேற்கத்தேய மற்றும் ஆபிரிக்க இசையை உள்ளடக்கி 60 இசை பாகங்களை கொண்டதாக இந்த இசை நிகழ்ச்சி அமையவுள்ளது.
இது ஆபிரிக்காவில் ழுமையாக இசையமைக்கப்பட்ட மாபெ ரும் இசை நிகழ்ச்சியாக அமையவுள்ளமை குறிப் பிடத்தக்கது.

இந்த இசை நிகழ்ச்சி எதிர்வரும் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறிடோயா நகரிலுள்ள அரச அரங்கத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த இசை நிகழ்ச்சிக்கான இசையை தென் ஆபிரிக்காவை பிறப்பிடமாகக் கொண்ட இசைக் கலைஞர் பொன்கானி நடோடனா பிறீன் இசையமைக்கிறார்.
தனது முன்னாள் கணவரான நெல்சன் மண்டேலா 1964 ஆம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்ட போது, வின்னி மண்டேலா உலகளாவிய கவனத்தை ஈர்த்தார்.

அரசாங்க எதிர்ப்பு வசனங்களை அச்சிட்டு விநியோகித்தமைக்காக 1969 ஆம் ஆண்டு வின்னி மண்டேலா கைது செய்யப்பட்டார்.

அவர் வேறு ஒரு நபருடன் காதல் தொடர்பை கொண்டிருந்ததாக வெளியான செய்திகளையடுத்து 1992 ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலாவிடமிருந்து பிரிந்த வின்னி, 1996 ஆம் ஆண்டு அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.

2003 ஆம் ஆண்டில் அவர் மீது மோசடி மற்றும் திருட்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல