சீனாவை சேர்ந்தவர் ஜாங்க் பெங்க்ராங். 58 வயதான இவர் தன் குடும்பத்துடன் சிச்சுவான் மாநிலம் லெஷான் நகரில் வசித்து வந்தார். இரவு அவர் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தபோது, நள்ளிரவு 2 மணிக்கு பயங்கர சத்தம் கேட்டது. இதை தொடர்ந்து அவர் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது, வீட்டுக்கு பின்னால் திடீர் என்று பெரும்பள்ளம் ஏற்பட்டு இருந்தது. தொடக்கத்தில் 10அடி அகலம் தான் இருந்தது. 24 மணிநேரத்துக்குள் அதன் அகலம் 70 அடிக்கு அதிகரித்தது.
அதன் ஆழத்தை யாரும் அளந்து பார்க்கவில்லை. தொடக்கத்தில் அவர் 130அடி நீள கயிறை வைத்து அளந்து பார்க்க முயன்றார். அந்த கயிற்றையும் விட ஆழம் அதிகமாக இருந்ததால், அவர் 200 அடி கயிற்றை எடுத்து வந்தார். அதையும் விட ஆழம் அதிகமாக இருந்ததால் அவர் அளப்பதை கைவிடடார்.
இந்த பள்ளம் மேலும் அகலமானால், அவரது வீடு இடிந்து விழுந்து விடும் அபாயம் ஏற்பட்டது. இதனால் வீட்டை காலி செய்து விட்டார். கிராம நிர்வாகம் தற்காலிகமாக தந்த 2 அறைகளில் அவர் குடும்பம் தங்கி உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக